சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை யாருமே ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லையா? உண்மை என்ன?
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 72 வீரர்கள் ரூ.468 கோடிக்கு விற்கப்பட்டார்கள். ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் போனார். அவரை இவ்வளவு கோடிகளை கொட்டி வாங்கி அணி எது என்றால், அது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தான். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.45 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

2-வது நாளான நேற்றைய ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரை ரூ.10¾ கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கின. முன்னதாக 34 வயதான புவனேஷ்வர்குமார் இதுவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
இதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.9.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை ரூ.8 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.
முகேஷ்குமாரை ரூ.8 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்சும், துஷர் தேஷ்பாண்டேவை ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்சும் வாங்கியது. ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யாவை ரூ.5.45 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென்சை ரூ.7 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை ரூ.5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. நேற்று ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது. 13 வயது சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது.
இதனிடையே பல வேகப்பந்து வீச்சாளர்களை அணிகள் ஆர்வமுடன் வாங்கிய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணியும் வாங்குவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.. இதனால் சச்சின் டெண்டல்கர் மகனை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்று செய்திகள் வேகமாக பரவியது. இதை பலரும் உண்மை என்று சச்சினை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட தொடங்கினர்.
இதனிடையே விசாரித்து பார்த்த போது, சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் என்கிற அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்திருப்பது தெரியவந்தது. ஐபிஎல் தொடரில் கடந்த 2020 முதல் இடம் பெற்று வருகிறார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து அடிப்படை விலையில் வாங்கி வருகிறது. அர்ஜூன் டெண்டல்கரை கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.

Fact Check
வெளியான செய்தி
18வது ஐபிஎல் போட்டி தொடரல் விளையாட பல வேகப்பந்து வீச்சாளர்களை அணிகள் ஆர்வமுடன் வாங்கிய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவா சச்சின் டெண்டுல்கருடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணியும் வாங்கவில்லை.
முடிவு
சச்சின் டெண்டல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் என்கிற அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்திருப்பது தெரியவந்தது. ஐபிஎல் தொடரில் கடந்த 2020 முதல் இடம் பெற்று வருகிறார்.
ரேட்டிங்
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications