முதல்வர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? உண்மை என்ன? TN Fact check கொடுத்த பதில்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி இருந்த நிலையில், தமிழக தகவல் சரி பார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு என்று கூறப்பட்டுள்ளதோடு, இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில் கர்நாடகா மாநிலத்தின் ஒரே தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 9,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை. அதுமட்டுமல்லாமல் சுமார் 9,500 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து தமிழக தகவல் சரிபார்ப்பகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள். அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு பகுதி!
கொளத்தூர் தொகுதியில் 84ஆம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் உள்ளனர்' என்று பாஜக எம்.பி அனுராஜ் தாக்கூர் பேசியதை தமிழக பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி.
வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதில், ரஃபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், காணொளியில் குறிப்பிட்டதுபோல் ரஃபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. மேலும், வாக்குச்சாவடி எண் 157ல் (வேறு பகுதி) ரஃபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
என்ன வதந்தி?
கொளத்தூர் தொகுதியில் 84ஆம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் உள்ளனர் என்று பாஜக எம்பி அனுதாக் தாக்கூர் பேசி இருந்தார். இதனை தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
உண்மை என்ன?
கொளத்தூர் தொகுதியில் 84ஆம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11ல் இருப்பது அடுக்குமாடி குடியிருப்பாகும். ரஃபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை.
Fact Check
பாஜக எம்பி அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டுகள் வதந்தி.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications