வெவ்வேறு தோற்றம்.. ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பஸ்கள் இயக்கமா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழக அரசு சார்பில் 'த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட அந்த 3 பஸ்களின் படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்நிலையில் வெவ்வேறு தோற்றத்தில் ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ் இயக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
பரவிய செய்தி என்ன: தமிழக அரசு சார்பில் 'த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட அந்த 3 பஸ்களின் படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இது 'வாட்ஸ் அப்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியது. ஆம்னி பேருந்துகள் தான் இப்படி சில சமயங்களில் மோசடி செய்வதாகவும், ஆனால் அரசு பேருந்துகளே இப்படி இருப்பது தான் இதுதான் முதல்முறை என்று சிலர் தகவல்கள் தெரிவித்தனர். அதெப்படி திமிங்கலம் ஒரே எண்ணில் மூன்று பேருந்துகள் ஓடுகிறது என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

அரசு மீது விமர்சனம்: இப்படி பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தார்கள். சிலர் இந்த விவகாரத்தில் தமிழக அரசையும் விமர்சித்து வருகிறார்கள். அதேநேரம் அரசு பேருந்துகளே என்றாலும் ஒரே பதிவு எண்ணில் 3 பேருந்துகள் ஓடுவது சாத்தியமா? அப்படி எல்லாம் அரசு அனுமதிக்குமா என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் என்ன: 'த.நா. 74 என் 1813' என்ற இந்த பஸ் 8-2-2017 அன்று புதிய பஸ்சாக கூண்டு கட்டி 9-3-2017 முதல் புறநகர் பஸ்சாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பஸ்சுக்கு பதில் புதிய பஸ் இயக்கப்பட்டதால், 4-1-2020 முதல் இது நகர பஸ்சாக (இருக்கை மாற்றம்) செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த பஸ்சின் வயது 6-ஐ கடந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைப்படி கடந்த 7-10-2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பஸ்சாக நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண்: 9ஏ) இயக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார் என்று அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்திருக்கிறது.
ஒரே பதிவு எண்ணில், வெவ்வேறு தோற்றத்தில் தனது மூன்று முகத்தை காட்டி சமூக வலைத்தளங்களில் றெக்கை கட்டி பறந்த புதிருக்கு விடையை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு.

Fact Check
வெளியான செய்தி
தமிழக அரசு சார்பில் ‘த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது.
முடிவு
தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.
ரேட்டிங்
-
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications