குரூப் 2 தேர்வில் முறைகேடா? அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள்! உண்மை என்ன? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில், விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
5,000 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான விடைத்தாள்களின் நகல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த விடைத்தாள் நகல்களை தேவைப்படுபவர்கள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதன்படி விடைத்தாள்களின் நகல்களை தேர்வர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்தனர். அப்போது தேர்வர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.
அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை பொறுத்தவரை மெயின் தேர்வு விடைத்தாள்களை இரண்டு முறை திருத்தப்படுவது வழக்கம். இதில் முதலில் திருத்திய மதிப்பீட்டாளாருக்கும், இரண்டாவது திருத்திய மதிப்பீட்டாளருக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இது டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு தேர்வருக்கு 19 ஆம் எண் கேள்விக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், இரண்டாவது மதிப்பீட்டாளர் அரை மதிப்பெண்கள் மட்டுமே வழங்கியிருக்கிறார். ஒருத்தர் இரண்டு பேருக்கு இல்லை, மொத்தம் 350க்கும் மேற்பட்டோருக்கு இப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்று வருவதாக வெளியாகும் தகவலை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- 2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
விரிந்துரைக்கும் வகை தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்களில் உள்ள ஒவ்வொரு வினாவின் விடையும் பல்வேறு மதிப்பீட்டாளர்களால் (multiple examiners), மதிப்பீடு செய்யப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளை (examiner bias), குறைப்பதற்காக, ஒரு தேர்வரின் ஒவ்வொரு வினாவிற்கான விடையும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் சராசரியே, தேர்வரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15% சதவீதத்திற்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின், தேர்வாணையம் அந்த தேர்வரின் அனைத்து வினாக்களின் விடைகளையும் மூன்றாவது முறை மதிப்பீடு செய்கிறது.
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு -|| (தொகுதி II மற்றும் IIA பணிகள்) -இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper), விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை. தவறான தகவலை பரப்பாதீர் !" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு II-ல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper) விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது
முடிவு
2023-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு ||-இல் விரிந்துரைக்கும் வகை (descriptive type paper), விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை.
ரேட்டிங்
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications