Fact check: வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற ரூ.5,099 கட்டணமா? பரவும் வதந்தி..தமிழக அரசு மறுப்பு!
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏற ரூபாய் 5,099 கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அதனை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
பரவிய தகவல்: கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு 5,099 கட்டணம் + ஜி.எஸ்.டி-யை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வழிபடுவதற்கு, அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பினார்.

ஆபத்தான வெள்ளியங்கிரி மலைப் பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத திராவிட மாடல் அரசு அதிரடியாக இப்பொது கொள்ளை கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது என பாஜக நிர்வாகி செல்வக்குமார் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.
உண்மை என்ன?: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏற கட்டணம் என்பது முற்றிலும் திரிக்கப்பட்ட தகவல் எனத் தெரிவித்துள்ளது.
டிரெக் தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் "டிரெக் தமிழ்நாடு" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கி.மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும். இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும்.
பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வதந்தியைப் பரப்பாதீர்!" எனத் தெரிவித்துள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
வெள்ளியங்கிரி மலை ஏற ரூபாய் 5,099 கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் பரவின.
முடிவு
வெள்ளியங்கிரியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. டிரெக் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தான் இன்சூரன்ஸ், உணவு, வாகன பயணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் இந்த கட்டணம் என தெரிவிக்கப்பட












Click it and Unblock the Notifications