Fact check: தீயாக பரவும் விஜய் வாய்ஸ் நோட்.. ‘லியோ’ கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாதா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தனது 'லியோ' திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய மாட்டேன் என அறிவித்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவின் பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட நகரங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் பந்த் நடத்தியுள்ளன. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் வலுத்துள்ள போராட்டங்களால் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 Vijays voice note claiming Leo not will be released in karnataka is fake

காவிரி விவகாரத்தால் பதற்றம்: காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம், கர்நாடகாவில் தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும், தமிழ் படங்களும் பாதிக்கப்படும். தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்படும். சினிமா நடிகர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படும். அந்தவகையில், கர்நாடகா - தமிழ்நாடு காவிரி விவகாரம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

அண்மையில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 'சித்தா' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூர் சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னட ரக்‌ஷா வேதிகா அமைப்பினர் தகராறு செய்தனர். இதையடுத்து நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் 'லியோ' படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் விஜய்யின் 'லியோ' படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் பேசுவதாக வெளியான ஆடியோ: இந்நிலையில், காவிரி பிரச்சனையால், கர்நாடகாவில் 'லியோ' படம் வெளியாவது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'லியோ' மட்டுமன்றி மற்ற தமிழ் படங்களின் வெளியீடும் உறுதியாகவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் பேசுவதாக ஒரு ஆடியோ X (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவு பரவி வருகிறது.

அந்த ஆடியோவில், "எல்லோருக்கும் வணக்கம், நான் உங்கள் விஜய் பேசுகிறேன். தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சனையின் காரணமாகவும், நடிகர் சித்தார்த்தை தாக்கிய கன்னட அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் என் 'லியோ' படத்தை நான் கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை. இதையே கர்நாடகா மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் 2026ல் மிகப்பெரிய விளைவை சந்திக்க வேண்டி வரும். நன்றி" என பேசுவது போல் இடம்பெற்றுள்ளது.

உண்மை என்ன?: இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த ஆடியோ விஜய் பேசியது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு நெருக்கமான பி.ஆர்.ஓக்கள் இதனை உறுதி செய்துள்ளனர். அஜித் ரசிகர் ஒருவர், விஜய்யின் 'லியோ' படம் குறித்து வேண்டுமென்றே, விஜய் குரல் போல AI மூலம் உருவாக்கி ஆடியோ வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விஜய்க்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பும் இந்த செயலுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த பொய்யான ஆடியோவை யாரும் பகிர வேண்டாம்.

Fact Check

வெளியான செய்தி

காவிரி பிரச்சனை காரணமாக ‘லியோ’ படத்தை தான் கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை என நடிகர் விஜய் கூறுவதாக ஆடியோ வெளியானது.

முடிவு

அஜித் ரசிகர் ஒருவர், விஜய் பேசுவது போல போலியாக உருவாக்கி பகிர்ந்த ஆடியோ இது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+