துபாயில் ரூ.33,000 சம்பளம்.. இன்று கோல்டன் விசா! விஜய் சேதுபதியின் நம்ப முடியாத பயணம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: விஜய் சேதுபதி - இன்று மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.. வாரிசு பின்னணி எதுவுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து, இன்றைக்கு இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு தன்னுடைய திறமையால் உயர்ந்திருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த சவால்களும் வறுமையும் பலருக்கும் தெரிந்திருந்தாலும், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது பழைய துபாய் வாழ்க்கை மற்றும் இப்போதைய நிலை குறித்துப் பகிர்ந்திருந்தார்.. இந்த பேட்டியை அவரது ரசிகர்கள் இப்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

கடந்த 2000ம் ஆண்டில் குடும்ப சூழ்நிலை காரணமாக விஜய் சேதுபதி வளைகுடா நாடான துபாய்க்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக அதாவது அக்கவுண்ட்டாக பணிபுரிந்துள்ளார்..

Vijay Sethupathi Dubai Golden Visa Dubai Salary Success Story Tamil Actor Golden Visa Dubai Cinema Makkal Selvan Kollywood

விஜய் சேதுபதி துபாய்

அப்போது அவரது மாதச் சம்பளம் வெறும் 1300 திர்ஹம்கள் மட்டுமே. இந்திய பண மதிப்பில் இது சுமார் 33000 ரூபாயாகும்.. ஆனால் இந்த சொற்ப வருமானம் அவரது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. அதனால் துபாயில் கிடைத்த அனைத்து விதமான பகுதிநேர வேலைகளையும் அவர் செய்துள்ளார்.

ஒவ்வொரு வியாழக்கிழமை காலையிலும் துபாய் சாலைகளில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், அப்பாட்மெண்ட்களுக்கு சென்று, கைகளில் இலவச விளம்பர நோட்டீஸ்களை விநியோகிக்கும் அளவிற்கு மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்..

அன்று துபாயில் சாதாரண அக்கவுண்ட்டண்டாக இருந்த விஜய் சேதுபதியின் அப்போதைய ஆகப்பெரிய கனவு என்ன தெரியுமா? எப்படியாவது டிவி சீரியல்களில் நடித்து மாதத்திற்குப் 10 ஆயிரம் முதல் 15000 ரூபாய் வரை சம்பாதித்து விட வேண்டும் என்பது மட்டும்தான். அந்த பணத்தைக் கொண்டு ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்பையும், ஒரு பழைய காரையும் வாங்க வேண்டும் என்பதே அவரது அதிகபட்ச டார்கெட்டாக இருந்துள்ளது.

நடிப்பு மீது தீராத காதல்

எனவே நடிப்பு மீது கொண்ட அடங்காத தாகம் காரணமாக அவர் துபாய் வேலையை விட்டு, சென்னைக்கு துறந்து சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.. ஆரம்பக் காலத்தில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்துவிடவில்லை... பல படங்களில் முகம் தெரியாத கூட்டத்தில் ஒருவராகவும், பெயர் குறிப்பிடப்படாத சின்ன சின்ன கேரக்டர்களிலும், ஆபத்தான சீன்களில் பாடி டூப் (Body Double) போட்டு, கடுமையான பணிகளைச் செய்துள்ளார்.

ஆனால் விடாமுயற்சியும் உழைப்பும் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்துள்ளன. இன்று ஷாருக்கான், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு, டாப் பொசிஷனை விஜய் சேதுபதி அடைந்துள்ளார்.

கோல்டன் விசா

அன்று சாதாரண வேலைக்காக துபாய் சென்றவர், இன்று அதே துபாய் அரசின் உயரிய கவுரவமிக்க "கோல்டன் விசா" (Golden Visa) அங்கீகாரத்தைப் பெற்று, அங்கு பல்வேறு முதலீடுகளைச் செய்யும் அளவுக்கு ஒரு தமிழ் சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

இத்தனை விஷயங்களையும் அந்த பேட்டியில் விஜய சேதுபதி அப்போது சொல்லியிருந்தார்.. அதுமட்டுமல்ல, சென்னைக்கு அருகில் 200 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் ஒன்றை கட்டி வருவதாக பரவிய செய்திகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார்..

தன்னம்பிக்கை - விடாமுயற்சி

இத்தனை வருடங்களில் தான் அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்கவில்லை என்றும், இப்போதும் சென்னையில் வெறும் 1300 சதுர அடி கொண்ட சாதாரண குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், தன் வீட்டில் டைனிங் டேபிள் கூட இல்லை, இன்றும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவதாகவும், ஆடம்பரங்கள் இல்லாத அதே பழைய மனிதனாகவே தான் வாழ்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

துபாயில் சாதாரண கணக்காளராகத் தொடங்கி, இன்று துபாயில் சிவப்பு கம்பள வரவேற்பைப் பெறும் ஒரு சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் அசல் வெற்றிக்கதை ஒரு மிகப்பெரிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+