பழையை சைக்கிளில் மீண்டும் ஜி.கே.வாசன்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மூப்பனாரின் மகன் என்ற அடையாளத்துடன் அரசியல் வாரிசாக களமிறங்கியவர் வாசன்.

தற்போது தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறார்.
மூப்பனார் வாரிசு...
மூத்த காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவரான ஜி. கே. மூப்பனாரின் மகன் வாசன். இவர் கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பிறந்தவர். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிறுவன செயலியல் பட்டம் பெற்றார்.

மூப்பனாரின் மறைவு...
1996ம் ஆண்டு மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். அதனைத் தொடர்து கடந்த 2001ம் ஆண்டு மூப்பனாரின் மறைவிற்குப் பின் கட்சிப் பொறுப்பு அவரது மகன் வாசன் வசம் வந்தது.

பொறுப்புகள்...
பின்னர் அக்கட்சியை மீண்டும் அவர் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.
மத்திய அமைச்சர்...
இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற வாசன், மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும், மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கோஷ்டி பூசல்...
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. ஜி.கே.வாசன், சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என அவரது ஆதரவாளர்கள் என்பது மட்டுமின்றி சிறு சிறு கோஷ்டி தலைவர்களாகவும் பலர் செயல்பட்டனர், தற்போதும் அதே நிலை தொடர்கிறது. இந்த நிலையைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார் வாசன்.

தனிக்கட்சி உதயம்...
அதன் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் வாசன். தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் தற்போது தமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications