Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் முதலீடு செய்தால் பேரழிவுதான்.. அதைவிட பெரிய மேட்டர் ஒன்று இருக்கு! வல்லுநர் தரும் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் ஒரு பேரழிவிற்கான முதலீடு.. தங்கத்தின் முதலீடு செய்வது எதிர்காலத்தில் ஏமாற்றத்தையே கொடுக்கும் என்று அமெரிக்க முதலீட்டாளர் ஒருவர் விமர்சித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாரம்பரிய முதலீட்டாளர்கள் மற்றும் தங்க ஆர்வலர்கள் மத்தியில் இந்த கருத்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான ப்ரோஃபெஷனல் கேப்பிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அந்தோனி பொம்பிலியானோ, தனது ட்விட்டர் பதிவில், தங்கத்தின் நீண்டகால செயல்திறன் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை. நவீன முதலீட்டு போர்ட்ஃபோலியோக்களில் அதன் மதிப்பு நம்பிக்கை தரும் விதமாக இல்லை.

gold rate Bitcoin

தங்கம் பிட்காயின்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் செயல்திறனை பிட்காயினுடன் ஒப்பிடும் போது அது மோசமான சூழலில் உள்ளது. பிட்காயினுடன் ஒப்பிடும்போது தங்கம் தனது கொள்முதல் சக்தியில் சுமார் 84% இழந்துள்ளது.

2020 முதல் தங்கம் ஒரு பேரழிவு முதலீடாக உள்ளது. பிட்காயின் போன்ற வரையறுக்கப்பட்ட வலுவான பணச் சொத்துடன் ஒப்பிடும்போது அது தனது கொள்முதல் சக்தியில் 84% இழந்துள்ளது. பிட்காயின் தங்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக உள்ளது. தங்கத்தை எளிதாக வென்று விடலாம். பிட்காயினை உங்களால் வெல்ல முடியாது. அதில் முதலீடு செய்வதே சரியானது, என்று கூறி உள்ளார்.

2020 முதல் பிட்காயின் அடிப்படையில் தங்கம் 84% சரிந்துள்ளது. அமெரிக்க டாலர் அடிப்படையில் தங்கம் நிலையானதாக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிட்காயின் அடிப்படையில் அதன் மதிப்பு ஏறக்குறைய அனைத்தையும் இழந்துள்ளது. 2020 ஐ விட 16 மடங்கு அதிக தங்கத்தை இன்று ஒரு பிட்காயின் வைத்து வாங்க முடியும்.. அப்படி பார்த்தால் பிட்காயின்தான் சரியான முதலீடு என்று கூறுவேன், என்று அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான ப்ரோஃபெஷனல் கேப்பிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அந்தோனி பொம்பிலியானோ தெரிவித்துள்ளார்.

ஜே பி மோர்கன் தங்கம்

தங்கத்தின் விலை பாதுகாப்பானதாக இல்லை என்று பிரபல ஜே பி மோர்கன் நிறுவனம் எச்சரித்து உள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தங்கம் கூட பாதுகாப்பு இல்லை. பிட்காயின் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஜே பி மோர்கன் நிறுவனம் கூறி உள்ளது. பிட்காயின் முதலீடே சரியானது, தங்கத்தின் முதலீடு பாதுகாப்பு தராது என்று கூறி உள்ளது. இப்படி தங்கம் விலை சரியும் என்று பலரும் கணித்து வருகின்றனர். ஆனால் தங்கத்தின் விலை சரியாது கண்டிப்பாக உயரும் என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.

என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.

முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்து இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+