இரவோடு இரவாக.. மீண்டும் வேலையை காட்டிய சீனா.. சர்ரென குறையும் தங்கம்.. பதறிய சர்வதேச மார்க்கெட்
பெய்ஜிங்: சீனா தனது கையிருப்பிலிருந்து சுமார் 90 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை உலக தங்கச் சந்தையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சீனா ஏன் தங்கத்தை விற்றது?
இதுகுறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், சீனா அதை விற்று தனது லாபத்தை வலுப்படுத்த விரும்பியிருக்கலாம். மேலும், தங்கம் இருப்பைக் குறைத்து, வெளிநாட்டு கரன்சி போன்ற பிற சொத்துக்களை அதிகரிக்க சீனா திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது தங்கத்தை விற்று டாலர் உள்ளிட்ட பணத்தின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்தையில் தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், விலையேற்ற அழுத்தத்தை குறைக்கவும் சீனா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.
சீனாவின் இந்த நடவடிக்கையால் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், சீனா போன்ற பெரிய நாடுகள் தங்கத்தை விற்பனை செய்யும் போது, தங்கத்தின் மதிப்பு குறைந்து விலை குறையக்கூடும்.
தங்கத்தை விற்கும் சீனா
சர்வதேச அளவில் உலக நாடுகள் தங்கம் வாங்குவது தங்கத்தின் விலையை பாதிக்கும். அதாவது ஒரு நாடு அதிகம் தங்கம் வாங்கினால்.. அதாவது சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை உயரும்.
உலக அளவில் இப்படி தங்கம் விலை உயர் முக்கிய காரணங்களில் ஒன்று சீனா. அங்கே தங்கம் குவிக்கப்பட்டது. சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்தது. மார்ச் 2025 நிலவரப்படி சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு தோராயமாக 2,292 மெட்ரிக் டன்கள் ஆகும். இது சீனாவை உலகின் முன்னணி தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது, சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்க இருப்புக்கள் சீராக அதிகரித்து வந்தது.
சீன மக்கள் வங்கி (PBoC) அதன் தங்க இருப்பை தீவிரமாக உயர்த்தி வந்தது, பிப்ரவரி 2025 இல் 50 டன்களும் மார்ச் 2025 இல் 5 டன்களும் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் தற்போது சீனா தனது கையிருப்பிலிருந்து சுமார் 90 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை உலக தங்கச் சந்தையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் சீனா திடீரென தங்கத்தை விற்க தொடங்கி உள்ளது. இதனால் தங்கம் விலையும் சரிய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது. அதற்கு முதல் வாரமும் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது.
இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கத்தின் விலை சரிந்து.. பெரிய சரிவு ஏற்பட்டது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,289.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,301 ஆக உள்ளது. சீனாவின் செயலால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் விலை சர்வதேச மார்க்கெட்டில் சரிய தொடங்கி உள்ளது.
-
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications