Gold Rate Today: சூப்பர் சான்ஸ்.. சென்னையில் தங்கம் விலை இன்று.. நாளை மார்க்கெட் எப்படி இருக்குமோ?
சென்னை: சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை, மார்க்கெட் விடுமுறை என்பதால் இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படும். ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று திடீரென சரிவைச் சந்தித்தது.

தங்கம் விலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஜூன் மாதம் தொடங்கி 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்தது.
நேற்று விலை சரிந்தது
ஜூன் 6 ஆம் தேதி சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று ஜூன் 7 ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை - இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்படும். அதன்படி, இன்று (ஜூன் 8) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7385க்கும், ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 117க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,17,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160












Click it and Unblock the Notifications