Gold Rate Today: கடந்த வாரம் 4,000 குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளான இன்று சர்ரென உயர்வு!
சென்னை: இன்று (அக்டோபர் 26) சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சுமார் 4,000 குறைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உயர்வுடன் ஆரம்பித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருகிறது.

தங்கம் விலை
தங்கத்தின் மீதான முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
புதன்கிழமை (அக்டோபர் 21) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர் சரிவு
வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 175 ரூபாய் குறைந்து 13,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை
நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், இன்று மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது.
சென்னையில் இன்று (அக்டோபர் 26) ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைந்திருந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்தது. இந்நிலையில், இன்று வாரத்தின் தொடக்க நாளான இன்று சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்துள்ளது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.220-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720


Click it and Unblock the Notifications
