ரூ.2 லட்சத்திற்கு மேல்.. 1 ரூபாய் கூட கொண்டு போகாதீங்க? தங்கம் வாங்க போறீங்களா? கவனமா இருங்க!
சென்னை: தங்கம் விலை உயரும் நிலையில் பலரும் அதிக அளவில் தங்கம் வாங்க தொடங்கி உள்ளனர். ஆனால் தங்கம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கியமாக நேரடியாக பணம் கொடுத்து தங்கம் வாங்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்தியாவில், நீங்கள் ₹2 லட்சம் வரை தங்கத்தை ரொக்கமாக வாங்கலாம். இந்தத் தொகையை விட அதிகமான தங்கம் வாங்க.. 1 ரூபாய் கூடுதலாக செலுத்தினாலும் அதற்கு ரொக்கம் கொடுக்க முடியாது. ரூ.2 லட்சத்திற்கு மேல் வங்கிப் பரிமாற்றங்கள், டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது டிஜிட்டல் வாலட்கள் போன்ற ரொக்கமற்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல், ₹50,000 க்கு மேல் தங்கம் வாங்குவதற்கு, பணம் செலுத்தும் முறை எதுவாக இருந்தாலும், அதற்கு PAN கார்டு விவரங்கள் தேவை.

எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?
இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
அதுவே பெண்கள் 500 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண்கள் 250 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் இந்த குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
காரட் தங்கம்
காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications