இன்னும் ரூ.4490 தான் இருக்கு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? வல்லுனர்கள் சொல்வது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் வாய்ப்புகள் உள்ளன. 1 லட்சம் ரூபாயை அடைய இன்னும் 4490 ரூபாய் மட்டுமே உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,550 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,754 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,239 ஆகவும் உள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் 95510 ஆக உள்ளது.

தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 1800 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,229.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,279 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,551 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை
தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?
1. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
2. தற்போது தங்கம் விலை இரண்டு வாரங்களாக குறைவதால் தங்கம் கொஞ்சம் குறைவான விலையில் கிடைக்கும்.
3. இப்போது விலை குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
4. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். அதனால் இப்போது இரண்டு வாரங்களாக விலை குறையும் போதே அதை வாங்கிக்கொள்வது சரியாக இருக்கும்.
தங்கம் விலை உயருமா?
இதனால் உலக அளவில் தொடர்ந்து தங்கம் விலை சரியுமா அல்லது உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலை சரியாது கண்டிப்பாக உயரும் என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.
முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications