தங்கம் விலை எப்போது குறையும்? அமெரிக்க பொருளாதாரம் தங்கம் ரேட்டில் எந்த மாதிரி தாக்கம் தரப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை எப்போது குறையும், என்பது பொது மக்கள் பலரின் கேள்வி. இதுவரை இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு இன்று ரூ.95 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7905க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 760 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.63,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான், தினம் தினம் புது உச்சம் பெறும் தங்கத்தின் விலை குறையுமா, குறைவது எப்போது எனத் தெரிந்தால் அப்போது நகை வாங்கலாமே என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்..

gold price gold us

அமெரிக்கப் பொருளாதாரம் தங்கத்தின் விலையை வெகுவாக பாதிக்கிறது என்பது நாம் அறிந்ததே. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும்போது, தங்கத்தின் விலைகள் குறையும் - பத்திரங்கள் மற்றும் நிலையான வருமான முதலீடுகளில் அதிக வருவாய் கிடைப்பதால், தங்கம் போன்ற வருவாய் இல்லாத சொத்துக்கள் குறைவான ஈர்ப்பு கொண்டதாக இருக்கும். மாறாக, ஃபெட் விகிதங்கள் குறையும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி படையெடுப்பதால் தங்கத்தின் விலை உயரும்.


தங்கம் விலை உயர்வு காரணங்கள்

மற்ற உலோகங்களை விட தங்கம் விலை வேகமாக உயர்வதால் விலைவாசி உயர்வை வருங்காலத்தில் ஈடு செய்துவிடும் என்பதால், ஒரு நல்ல முதலீடாக பார்க்கப்படுகிறது. குறுகிய கால விலை ஏற்ற இறக்கங்களுக்கு இது பொருந்தாது. அமெரிக்கா மட்டுமின்றி, பல காரணிகள் தங்கத்தின் விலையில் மாற்றங்களுக்கு காரணமாக உள்ளன. புவிசார் அரசியல் பதட்டங்கள், பண மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் மத்திய வங்கி கையிருப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில், பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போது உள்நாட்டு தேவை தங்கத்தின் விலையை கொஞ்சம் பாதிக்கிறது.

முதலீடு

தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கம், பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் நிலையான வருமான சொத்துக்களை உள்ளடக்கிய ஒரு சமநிலையான முதலீட்டு அணுகுமுறையை மக்கள் கையில் எடுக்க வேண்டும். குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் உள்ளது, ரிசர்வ் வங்கி உட்பட உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், தங்களது கையிருப்புகளின் ஒரு பகுதியாக தங்கத்தை தொடர்ந்து குவித்து வருகின்றன, இது தேவையை அதிகரிக்கிறது.

தங்கம் விலை

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கிறது. பணவீக்கமும் தொடர்ந்து இருப்பதால், அமெரிக்க ரிசர்வ் வட்டி விகித உயர்வை ரொம்பவும் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.எனவே, இன்னும் சில காலம் தங்கத்தின் விலை உயரத்திலேயே இருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+