வேறுபாடு குறையப்போகிறது.. தங்கம் வாங்குவதை விட வெள்ளி வாங்குவது பெஸ்ட்.. வல்லுனர்கள் அறிவுரை
டெல்லி: சமீப மாதங்களில், தங்கத்தின் விலை உலக அளவிலும், இந்தியாவிலும் கூடி வருகிறது. இருப்பினும், வெள்ளி விலை ஒப்பீட்டளவில் மந்தமாகவே உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை 25.1% உயர்ந்துள்ளது, வெள்ளி 13.5% உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் ஸ்பாட் சந்தையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.97,442 ஆக இருந்தது.
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக வருமானத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது.கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.

இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.
இரண்டு மடங்கு உயரும்
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக் குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications