வெள்ளிதான் புது கோல்டு.. தங்கத்தை மிஸ் பண்ணவங்க.. சில்வர் வாங்க மறந்துடாதீங்க.. செம சான்ஸ்!
சென்னை: வெள்ளியின் விலை ஒரு கிலோகிராம் ₹1.5 லட்சமாக உயர்ந்து, இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், தங்கம் 10 கிராமுக்கு ₹1,19,500 ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி மார்க்கெட்டில் வெள்ளியின் பொற்காலம் தற்போது தொடங்கியுள்ளது என கூறலாம். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலைகள் 22% உயர்ந்துள்ளது, இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும்.

தங்கத்தின் விலை
99.9% தூய்மையான தங்கம், அனைத்து வரிகளும் சேர்த்து, முந்தைய விலையான ₹1,18,000 ஆக இருந்த நிலையில், ₹1,500 அதிகரித்து ₹1,19,500 ஆக உச்சத்தை தொட்டது. உள்ளூர் புல்லியன் சந்தையில், 99.5% தூய்மையான தங்கம் ₹1,500 அதிகரித்து, சனிக்கிழமை ₹1,17,400 ஆக இருந்த நிலையில், ₹1,18,900 ஆக புதிய உச்சத்தை எட்டியது.
வெள்ளியின் விலையும் கணிசமான உயர்வைச் சந்தித்தது. இது ₹7,000 அதிகரித்து, ஒரு கிலோகிராம் ₹1,50,000 ஆக (அனைத்து வரிகளும் சேர்த்து) புதிய சாதனையை படைத்தது.
வெள்ளிதான் புது தங்கம் - இரண்டு மடங்கு உயரும்
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக் குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications