டிரம்ப் படிச்சு படிச்சு சொன்னாரே! அமெரிக்காவில் ஒரு நபர் எடுத்த முடிவால்! தங்க மார்க்கெட்டே ஆடுதே!
நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி இனி அடுத்த சில மாதங்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்காது என்று அறிவித்து உள்ளது. தற்போதைய தலைவருக்கு கீழ் வட்டி விகிதம் இனி குறைக்கப்படாது என்று அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் (Fed) அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான 5 பேர் கொண்ட பட்டியலை கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெரோம் பவல் பதவி முடிவிற்கு வரும் நிலையில் இந்த புதிய தலைவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தலைவரின் பெயர் உறுதி செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக உள்ள ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து வருகிறார் டொனால்ட் டிரம்ப்.
ஜெரோம் பவல் இருக்கும் வரை வட்டி விகிதம் குறையாது
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெரோம் பவல் இருக்கும் வரை வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெரோம் பவல் வட்டி விகித குறைப்பை கடுமையாக எதிர்க்கும் நிலையில், அவர் இருக்கும் வரை கண்டிப்பாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்றால்.. டாலர் வலிமை அடையும். டாலரின் மதிப்பு உயரும். அப்படி டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தின் மதிப்பு குறையும். தங்கத்தின் மதிப்பு கடுமையாக சரிவை சந்திக்கும். டிரம்ப் எதிர்ப்பை மீறி.. ஜெரோம் பவல் இந்த முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் vs பெடரல் வங்கி மோதல்
ஏற்கனவே வட்டி விகிதம் தொடர்பாக.. மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வட்டி மதிப்பை குறைக்க வேண்டும். வட்டி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும்.
அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும். அவரை நீக்கி விட்டு வரியை குறைக்க சொல்ல முடியும். அடுத்த சில வாரங்களுக்குள் வட்டி மதிப்பை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று அவர் கூறி உள்ளார்.
இதற்கு பவல் அளித்த பதிலில், நாங்கள் வரி குறைப்பை பல ஆலோசனைக்கு பின்பே எடுப்போம். டிரம்ப் சொல்கிறார் என்பதால் செய்ய முடியாது. அதோடு 2026 மே வரை என் பதவிக்காலம் இருக்கிறது. அதற்கு முன் நான் ராஜினாமா செய்யும் திட்டத்தில் இல்லை என்று கூறி உள்ளார் .
பவல் டிரம்ப் எச்சரிக்கை
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளார். இதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.
முக்கியமாக டிரம்ப் செய்யும் ஒவ்வொரு மூவும் அதிக பணவீக்கம் ஏற்பட காரணமாக மாறி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவை அதல பாதாளத்திற்கு தள்ளுவதாக அவர் எச்சரித்து உள்ளார்.
டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மோசமானதாக உள்ளன. அவர் எடுக்கும் முடிவுகளை கணிக்க முடியவில்லை. அமெரிக்காவை மோசமான நிலைக்கு தள்ளும் முடிவுகளாக அவை உள்ளன. தினம் தினம் மார்க்கெட் இதனால் பாதிக்கிறது. பல கொள்கைகளின் அடிப்படைகளை அவர் மாற்றுகிறார். அதுதான் சிக்கலே. இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது.
அதாவது பணத்தின் மதிப்பு குறைகிறது. இருக்கிற பணத்தை வைத்து பொருட்களை வாங்க முடியவில்லை. டாலரின் மதிப்பு வேகமாக சரிகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். எதிர்பார்க்காத சரிவை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.
தங்கம் விலை உயரும்?
இப்போது வட்டி மதிப்பை குறைக்க மறுக்கும் பவல் நீக்கப்படுவதால் புதிய தலைவர் வந்ததும் வட்டி மதிப்பு குறைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
வட்டி மதிப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டால் டாலர் மதிப்பு சரியும். ஏனென்றால் வங்கிகளில் டாலர்களை சேமிப்பவரால் வட்டி மதிப்பு குறைவாக உள்ளது என்று டாலரை வெளியே எடுப்பார்கள். அதற்கு பதிலாக வேறு பொருட்களில் முதலீடு செய்வார்கள். இதனால் டாலர் மதிப்பு குறையும். பெரும்பாலும் இவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
இதனால் தங்கத்தின் மதிப்பு வேகமாக உயரும். பொதுவாக வட்டி மதிப்பு குறைந்தால் தங்கத்தின் மதிப்பு உயரும். எனவே டிரம்ப் எடுக்கும் முடிவால் தங்கத்தின் மதிப்பு வரும் நாட்களில் சரமாரியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.
-
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications