படக்குனு 10 கிராம் வாங்குங்க.. 2026ல் தங்கம் விலை எவ்வளவு உயரும்? உலக வங்கிகளின் அதிரடி கணிப்பு இதோ!
சென்னை: சர்வதேச அளவில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தாறுமாறாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகைக் கடை விற்பனையாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஆனால் சில நாட்களுக்குள் விலை திடீரென சரிந்தது. இந்நிலையில், வரும் 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என உலகின் பிரபலமான வங்கிகள் கணித்துள்ளன.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால் சில நாட்களில் சந்தை சரிந்து, அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது; பின்னர் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 சரிந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்குக் கீழ் விற்பனையானது.

தங்கம் விலை
பின்னர் மீண்டும் சிறிய அளவில் விலை உயர்வு காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை; ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ச்சியான ஏற்ற இறக்க நிலைமையில் தங்கம் விலை 2026-ம் ஆண்டில் எந்த அளவுக்கு செல்வது என்பதில் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரியில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,000 விற்ற நிலையில், பின்னர் ரூ.12,000 வரை சென்றது.
தங்கம் விலை கணிப்பு
இந்நிலையில், ஒரு பவுன் தங்கம் ரூ.57,000 லிருந்து ரூ.97,000 வரை பல உச்சங்களைத் தொட்டது. சர்வதேச சந்தையிலும் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலரைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிலையில், உலக வங்கிகள் 2026-ம் ஆண்டுக்கான தங்கம் விலை குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் தற்போது முதலீட்டாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026-ம் ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை ஒரு அவுன்ஸிற்கு 3,575 டாலர் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிட்டி வங்கி தங்கம்
அதேபோல், Citi Bank தனது அறிக்கையில் 2026 முதல் மூன்று மாதங்களில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 3,840 டாலர் ஆக உயரலாம் என தெரிவித்துள்ளது. Goldman Sachs வங்கியின் மதிப்பீட்டின்படி 2026 முதல் காலாண்டில் தங்கம் விலை 4,440 டாலர் வரை போகலாம்; ஆண்டின் இறுதியில் அது 4,900 டாலர் வரை ஏறக்கூடும். Morgan Stanley வங்கி 2026 மத்தியில் 4,500 டாலர், Wells Fargo வங்கி 2026 இறுதியில் 4,500 - 4,700 டாலர், எனவும் கணித்துள்ளன.
2026ல் தங்கம் விலை
அதேபோல், சிங்கப்பூரின் UOB வங்கி தங்கம் 2026-ல் 4,600 டாலர் வரை உயரலாம் என கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தின் UBS வங்கி 2026 மார்ச் மாதத்தில் தங்கம் 4,700 டாலர் வரை சென்றடையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதேவேளை, லண்டன் பொன் சந்தை சங்கம் (LBMA) 2026-ம் ஆண்டு தங்கம் 4,980 டாலர் வரை உயரும் என கூறியுள்ளது. மேலும், HSBC, Bank of America (BoFA) மற்றும் Société Générale (SocGen) ஆகிய வங்கிகள் தங்கம் 2026-ல் 5,000 டாலர் வரை உயரும் என கணித்துள்ளன.
ஜேபி மோர்கன் கணிப்பு
ஆனால் அதனை விட அதிகமாக JP Morgan வங்கி தங்கம் 2026 இறுதியில் 5,055 டாலர், மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 டாலர் வரை சென்று விடும் எனக் கூறியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் பெருமளவு தங்கக் கொள்முதல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications