gold rate | தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்வு.. இப்படி மட்டும் வாங்கியிருந்தால், சும்மாவே கொட்டும் பணம்
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ரூ.1,02,400ஆக விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு 10 ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்நிலையில் டிசம்பர் 25ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 12, 820க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிலோவிற்கு 1000 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருகின்றன. இதில் தங்கம் முதல் பரிசை தட்டி சென்றாலும், வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வெறும் 45 ரூபாய் ஆக ஒரு கிராம் இருந்தது.இன்று ஒரு கிராம் 245 ரூபாய் ஆக இருக்கிறது.

ஒருவர் வெள்ளியில் ஐந்து வருடம் முன்பு முதலீடு செய்திருந்தால் ஒரு கிராமுக்கு 200 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 2 லட்சம் லாபமாக கிடைத்திருக்கும். 10 லட்சத்தை ஒருவர் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால், இன்று உங்கள் கையில் 54.44 லட்சம் ரூபாய் இருந்திருக்கும். உங்கள் அசல் தொகையைப் போல 4.4 மடங்கு கூடுதல் லாபம் கிடைத்திருக்கும்.
வெள்ளி விலையில் இவ்வளவு பெரிய உயர்வு ஏற்படுவதற்கு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தேவை தான் காரணம் ஆகும். குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய ஆற்றல் தயாரிப்பில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்ததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து உயர இதுவே தற்போதுகாரணமாக உள்ளது.
இது ஒருபுறம் எனில் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை மேலும் மேலும் உயர தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. தங்கம் விலை டிசம்பர் 24ம் தேதியான நேற்று ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,800க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.1,02,400ஆக உயர்ந்து விற்பனையானது.
தங்கம் ஒருபக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறதே என்று வெள்ளியை திரும்பி பார்த்தால், வெள்ளி விலை தங்கத்தைவிவும் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. டிசம்பர் 24ம் தேதியான நேற்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து 244க்கு விற்பனையானது.
ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் 10 ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்பனையானது. டிசம்பர் 25ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 12,820க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 102,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்று சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 1000 ரூபாய் உயர்ந்து 2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
Gold Rate: சென்னையில் தங்கம் விலை சரிவு! காலையில் கூடிய வேகத்தில் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications