போடு வெடிய.. தங்கம் விலை அதிரடியாக 38 சதவீதம் குறைய போகுதாம்! மார்க்கெட் நிபுணர் கணிப்பு
வாஷிங்டன்: சர்வதேச அளவில் நடந்து வரும் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் தங்கம் விலை 38% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் இதனை தெரிவித்திருக்கிறார். ஒரு அவுன்ஸ் $3,080 இருந்து $1,820 வரை குறையலாம் என்று அவர் கணித்திருக்கிறார்.

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்தது. இந்த விலை ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு அப்படியல்ல. இத்தனை நாட்களாக தங்கத்தின் விலை ஏறியதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. உலகளாவிய மந்தநிலை, பணவீக்கம், பொருளாதார நிச்சயமின்மை ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி தள்ளியது.
டிமான்ட் எதற்கு அதிகமோ, அதன் விலையும் உயரும் என்பது அடிப்படை விதி. அதாவது தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலை உயர்ந்தது. உலகமே அமெரிக்க பொருளாதார சந்தையை அடிப்படையாக கொண்டுதான் இயங்கி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் டிரம்ப் வந்த பிறகு பல மாற்றங்கள் எற்பட்டிருக்கின்றன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும். டிரம்பின் வரி நடவடிக்கை கூட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால் இதெல்லாம் நேற்றுவரை நடந்த விஷயங்கள். இன்று நிலைமையே வேறு. தங்கத்திற்கு அதிக டிமான்ட் இருப்பதை உணர்ந்து கொண்ட உற்பத்தியாளர்கள், அதை மேலும் அதிகமாக தோண்டி எடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் தங்கம் தோண்டுவதால் ஒரு அவுன்ஸுக்கு $950 வரை லாபம் கிடைத்ததாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனவே இன்று பல நிறுவனங்கள் தங்கத்தை தோண்டி எடுக்க வரிசை கட்டி நிற்கின்றன.
மறுபுறம் உலகளவில் தங்க சேமிப்பு 9% அதிகரித்து 2,16,265 டன்னாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா தங்கம் உற்பத்தியை அதிகரித்திருக்கிறது. நம்மூர் ரிசர்வ் வங்கி போல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகளில் தங்கம் 1,000 டன்னுக்கும் அதிகமாக இருப்பு இருக்கிறது. எனவே மேலும் அதிகமாக தங்கத்தை வாங்க வங்கிகள் விருப்பம் காட்டவில்லை. ஆய்வு ஒன்றில் 71% வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கின்றன.
எனவே டிமான்ட் குறைய தொடங்கியுள்ளது. இது போதுமே விலை சரிய. முதலீட்டாளர்களும் கொஞ்ச காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக வேறு ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். இதனால் விலை மளமளவென குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே! தங்கம் விலை குறையுமா? அப்படி குறைந்தால் யாருக்கு லாபம்?
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications