ஓல்டு இஸ் கோல்டு.. தாறுமாறு தங்கம் விலை! ’பழசை’ மறக்காமல்.. தெளிவாக காய் நகர்த்தும் தென்னிந்தியர்கள்
டெல்லி: இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்போது மக்கள் புதிய நகைகள் வாங்குவதற்குப் பதிலாக தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை மாற்றிக் கொள்வதே பரவலான பழக்கமாகி விட்டது. கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததால், இப்போதைய பண்டிகை காலம் முழுவதும் பழைய தங்க நகைகளை விற்று புதிதாக மாற்றும் பழக்கம் பெருகி வருவது நகை வியாபாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் பல்வேறு சூழல்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஜனவரி மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த தங்கத்தின் விலை சில மாதங்களிலேயே 95 ஆயிரம் ரூபாயை தொட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில் 90 ஆயிரம் ரூபாய்க்கு கீழே செல்லுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தங்கத்தை வாங்க விரும்பும் மக்கள் பணத்தை கொடுத்து வாங்காமல் தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது.

தங்க விலை
டாடா குழுமத்தின் நகை நிறுவனமான டானிஷ்க் நிறுவனத்தில், கடந்த ஆண்டு தன்தேரஸ் பண்டிகை காலத்தில் 35 சதவீதம் இருந்த தங்க மாற்று விற்பனை, இந்த ஆண்டு 50 சதவீதத்துக்கு அருகில் சென்றுள்ளது. அதேபோல் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனமும் கடந்த ஆண்டின் 22 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சென்கோ கோல்ட் நிறுவனமும் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கமாக மாற்றும் வர்த்தகம் 35 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகை மாற்றம்
தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்ததால், மக்கள் புதிய தங்கம் வாங்கி செலவழிக்காமல், பழைய நகைகளை மாற்றிக் கொள்வதே பயனுள்ளதாக நினைக்கிறார்கள். விற்பனை அளவு குறைந்தாலும், ஒவ்வொரு பில்லின் மதிப்பு அதிகரித்துள்ளது. தங்க விலை நிலைபெற்றதும் விற்பனை அளவு மீண்டும் உயரும் எனவும், அதே நேரத்தில், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவன நிதித் தலைவர் தினேஷ் தலுஜா கூறியுள்ளார்.
தங்க நகை
இந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தன்தேரஸ் நாளில் 10 கிராம் தங்கத்தின் விலை, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.34 லட்சம் வரை சென்றது. கடந்த ஆண்டின் அதே நாளில் இது ரூ.80,000 மட்டுமே இருந்தது. அதாவது ஒரு ஆண்டில் சுமார் 69 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய தங்கம் வாங்க பெரும் தொகை செலவிட வேண்டியிருப்பதால், மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை மாற்றி புதிய வடிவங்களில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்திய வீடுகளில் சுமார் 22,000 டன் தங்கம் 'பயன்பாட்டின்றி' கிடக்கிறது என மதிப்பிடப்படுகிறது. இதனைக் கொண்டு பலர் பழைய நகைகளை மாற்றி புதிதாக வடிவமைக்க விரும்புகின்றனர்.
டானிஷ்க் சலுகை
மக்களை கவர்வதற்காக டானிஷ்க் நிறுவனம் எந்த வகை (கரட்) தங்கமாக இருந்தாலும் விலை கழிவில்லாமல் மாற்றிக் கொடுக்கும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. நவராத்திரி காலத்தில் 40 சதவீதத்துக்கு அருகில் இருந்த தங்க மாற்று விற்பனை, தீபாவளி முடிவில் 50 சதவீதம் வரை சென்றுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜோய் சாவ்லா தெரிவித்துள்ளார். டைட்டன் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள காலாண்டில் நகை விற்பனை 19 சதவீதம் உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தங்க விலை உயர்வும், மாற்றுச் சலுகைகளும் விற்பனையை தக்க வைத்துள்ளன.
பழைய நகை
வட இந்தியா, மேற்கு இந்தியா, கிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் பழைய தங்கத்தை மாற்றும் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் மக்கள் புதிய தங்க நகைகளை வாங்கும் பழக்கத்தையே தொடர்ந்து வருகிறார்கள். இந்தியா ஆண்டுக்கு சுமார் 850 டன் தங்கம் பயன்படுத்துகிறது, அதில் 40 சதவீதம் தென்னிந்தியாவிலேயே நுகரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications