Gold Rate Today: மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன? நாளை என்னாகுமோ?
சென்னை: கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இந்நிலையில், மார்க்கெட் விடுமுறை நாளான இன்று தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட் திறக்கும் நாளான நாளை தங்கம் விலை எகிறுமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்சைய திருதியையை முன்னிட்டு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியதுடன் விற்பனையும் அமோகமாக இருந்தது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,250 ரூபாய்க்கும், சவரன் 1,14,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
ஏப்ரல் 23 நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,447ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் சவரன் ரூ.1,23,576 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 100 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று (ஏப்ரல் 25) சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 5 உயர்ந்து, ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டது.
5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை சனிக்கிழமையான நேற்று சவரனுக்கு 800 அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மார்க்கெட் விடுமுறை. தங்கம் விலை நேற்றைய விலைக்கே மாற்றமின்றி விற்பனை செய்யப்படும்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
26.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600 (இன்று - மாற்றமில்லை)
25.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600 (நேற்று)
24.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
23.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,280
22.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,000
21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400













Click it and Unblock the Notifications