தங்கம் விலை திடீர் சரிவு! உலகப்போரால் வந்த எதிர்பார்க்காத ட்விஸ்ட்! கோல்ட் குரு சாந்தகுமார் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகமே ஒரு போர் முனையில் நின்றுகொண்டிருக்கிறது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா என வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம், உலகப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஒரு சாமானிய மனிதனின் மிகப்பெரிய கவலை அவனது சேமிப்பும், அவனது குடும்பத்தின் எதிர்கால அடையாளமாக இருக்கும் 'தங்கம்' தான்.

"தங்கம் விலை விண்ணைத் தொடப்போகிறது" என்று ஒருபுறம் செய்திகள் வர, மறுபுறம் யாரும் எதிர்பார்க்காத வகையில் விலை திடீரென சரிவைச் சந்திக்கிறது. தங்க வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தும் தங்கம் ஏன் விலை குறைகிறது? இது வரப்போகும் பெரும் புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியா? அல்லது நகை வாங்கக் காத்திருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பா?

gold rate silver investment

இந்தக் குழப்பங்களுக்கு விடை தேடி, ஒன்இந்தியா தமிழ் (Oneindia Tamil) தளம், தங்கத்தின் சந்தை நிலவரத்தை அதன் நாடித் துடிப்பு வரை நன்கு அறிந்த நிபுணர் கோல்ட் குரு சாந்தகுமார் அவர்களை சந்தித்தது.

தங்கம் விலை ஏன் திடீரென குறைந்தது?

ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் (Oil) விநியோகத்தில் தற்காலிகத் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் செல்லும் ஜலசந்தியில் இப்போது 15% மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஆயில் விலை உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை தங்கத்திலிருந்து எடுத்து ஆயில் பக்கம் திருப்புவதால், தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இந்த போர்ச் சூழல் மற்றும் ஆயில் விலை உயர்வு நீடிக்கும் வரை இந்த சரிவு (Down trend) இருக்கக்கூடும்.

தங்கம் வாங்க இது சரியான நேரமா?

இப்போது குறைந்திருக்கும் இந்த விலை ஒரு நல்ல தருணம். திருமண விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் இப்போதே தங்கம் வாங்கி வைப்பது நல்லது. ஏனெனில் விலை மேலும் குறையுமா என்று காத்திருக்கும்போதே, திடீரென ஒரு வாரத்தில் விலை உயர்ந்துவிடும்.

விலை 2 லட்சத்தைத் தாண்டுமா?

அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை 2 லட்சத்தைத் தாண்டாது, ஆனால் அடுத்த சில மாதங்களில் அந்த நிலையை எட்ட வாய்ப்புள்ளது. போர் நீடித்துக்கொண்டே போவதும், ஈரான் போன்ற நாடுகளின் பாதுகாப்பு பலமும் இதற்கு ஒரு காரணமாக அமையும்.

பழைய தங்கத்தை விற்கலாமா?

உங்களுக்குப் பணத் தேவை இருந்து, அந்தப் பணத்தை வேறு ஒரு விஷயத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் விற்கலாம். ஆனால், பணத்தை சும்மா வைத்திருக்கப் போகிறீர்கள் என்றால் விற்பது வீணானது. தங்கம் அடுத்த ஒரு வருடத்தில் குறைந்தது 30% லாபம் தர வாய்ப்புள்ளது.

துபாயில் தங்கம் வாங்கி வரலாமா?

துபாய்க்கும் இந்தியாவிற்கும் விலையில் வித்தியாசம் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் தங்கம் வாங்கி வருவது சட்டப்படி அனுமதிக்கப்படுவதில்லை. குறைந்தது ஒரு வருடம் (365 நாட்கள்) அங்கு தங்கியிருந்து வேலை செய்பவர்கள் மட்டுமே தங்கம் கொண்டு வர முடியும். ஆறு மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு வருபவர்கள் கூட 33% வரி (Tax) கட்ட வேண்டியிருக்கும்

நேர்காணலின் முடிவில், தங்கம் என்பது நீண்ட கால அடிப்படையில் எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதால், சிறுகச் சிறுகச் சேமிப்பதே சாமானியர்களுக்குப் பாதுகாப்பானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+