பஸ்பமாக அழிந்த.. ரூ.14,93,18,14,00,00,000.. கதறும் தங்க மார்க்கெட்.. ஆசையாக வாங்கியவர்களுக்கு செக்
சென்னை: தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் 1.7 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது. அதாவது தங்கம் வைத்துள்ள பலர் அதை விற்று காசாக மாற்றியதால் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது.
போன வாரம் வரி புதிய உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினர். அதாவது கையில் உள்ள தங்கத்தை விற்று அதை டாலராக மாற்றும் பணிகளை செய்தனர். இதனால், சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது. இந்த திடீர் வீழ்ச்சி தங்கத்தின் தொடர்ச்சியான ஏற்றம் குறித்த நம்பிக்கையில் இருந்த பலரை வியப்படையச் செய்தது.

தங்கம் விலை சரிவு
இதன் மூலம் தங்கம் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 6.3% சரிவு ஏற்பட்டது. . ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,381 என்ற உச்ச நிலையிலிருந்து $4,082 ஆகக் குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒருநாள் சரிவாகும். சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹13,092 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹12,001 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,901 ஆகவும் உள்ளது.
இந்த கடுமையான வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களித்தன. நீண்டகால ஏற்றத்திற்குப் பிறகு பலர் லாபத்திற்காக தங்கத்தை விற்றது, அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைதல், அமெரிக்க டாலர் வலுவடைதல், மற்றும் தங்கத்தின் கையிருப்பு அதிகரிப்பு, சில மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பது ஆகியவை காரணங்கள் ஆகும்.
தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் அக்டோபர் 21, 2025 அன்று கடுமையாகச் சரிந்தது. ஒரு அவுன்ஸ் $47.12 ஆகக் குறைந்து, கிட்டத்தட்ட 7.5% வீழ்ச்சியைச் சந்தித்தது. இது வெள்ளியின் விலையில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவுகளில் ஒன்றாகும். 2013ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தின் மிகப்பெரிய தினசரி வீழ்ச்சிக்கு இது சமமானதாகக் கருதப்பட்டது.
டாலர் மதிப்பு உயர்வு
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் 1.7 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது. அதாவது தங்கம் வைத்துள்ள பலர் அதை விற்று காசாக மாற்றியதால் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு 14,93,18,14,00,00,000 ரூபாய் ஆகும்.
அமெரிக்க டாலர் சமீபத்தில் வலுவடைந்துள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு (DXY) அக்டோபர் 21, 2025 அன்று சுமார் 98.91 ஆக உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வார உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய அமர்வில் இருந்து 0.33% அதிகரிப்பைக் குறிக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பணவியல் கொள்கை எதிர்பார்ப்புகள் குறித்த முதலீட்டாளர்களின் மதிப்பீடு ஆகியவை இந்த வலுவடைதலுக்கு காரணமாக அமைந்தன. இதன் காரணமாக பலர் தங்கத்தை விற்று டாலரை வாங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications