Gold rate today: மாத முதல் நாளிலேயே இப்படியா.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்னைக்கு மட்டும் இவ்வளவு கூடியிருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold rate today) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக உச்சம் தொட்டு வருகிறது. தினம் தினம் புதிய உச்சம் தொடும் தங்கம் விலை இன்று காலையில் மேலும் உயர்ந்தது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,480 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நம் நாட்டில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

gold price Chennai gold

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

அதிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தினம் தினம் உச்சம் தொட்டு வருகிறது. நகை பிரியர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. சற்று குறைந்தால் தங்கம் வாங்கி வைக்கலாம் என நினைக்கும் நபர்களின் எண்ணம் கனவாகவே போகின்ற அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை சென்னையில் ரூ.86,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.10,860-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் மட்டும் சென்னையில் இன்று காலையில் ரூ.30 அதிகரித்துள்ளது.

இன்றைய ரேட் என்ன?

இதன் மூலம் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.10,890-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலையில் ரூ.240 உயர்ந்து ரூ.87,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.480 அதிகரித்தது.

ஒரே நாளில் இருமுறை உயர்வு

இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை சென்னையில் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அக்டோபர் மாதம் தொடங்கிய முதல் நாளிலேயே தங்கம் விலை இப்படி அதிர்ச்சி கொடுத்தது நகைப்பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880
29.09.2025- ஒரு சவரன் ரூ. 85,600
28.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120
27.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120
26.09.2025- ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025- ஒரு சவரன் ரூ.84,080
24.09.2025- ஒரு சவரன் ரூ.84,800
24.09.2025 - ஒரு சவரன் ரூ.84,880
23.09.2025 - ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 - ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+