Gold Price: காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold price) கடந்த இரு நாட்களாக மாலையில் தான் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இன்று காலையிலேயே தங்கம் விலை அதிர்ச்சி தந்துள்ளது. நேற்று காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 உயர்ந்துள்ளது. தங்கம் விலையை போன்றே இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் உயராமல் குறைந்து வருகிறது. குறிப்பாக ஈரான் அமெரிக்கா போருக்கு பிறகு பெரிய அளவில் உயரவில்லை. தொடர்ந்து சரிந்து வருகிறது. இடையிடையே தங்கம் விலை உயர்ந்தாலும் பின்னர் தங்கம் விலையானது குறைந்தபடியே வந்தது.

Gold price delivers a shock early in the morning another sharp rise jewelry lovers stunned

உயரத் தொடங்கிய தங்கம் விலை

இதன் படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1.25 லட்சம் வரை விற்பனை ஆன நிலையில் தற்போது ஒரு சவரன் ரூ.1.04 லட்சம் என்ற அளவுக்கு குறைந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,030-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் குஷியடைந்தனர். ஆனால் மாலையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தது. நேற்று முன் தினம் மாலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.105,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்று முன் தினம் தான் அப்படி என்றால், நேற்றும் இதே போன்று தங்கம் விலை காலை மாலை என மாறியது. நேற்று காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்து இருந்த நிலையில் நேற்று மாலையில் ரூ.1,200 அதிகரித்தது. சென்னையில் நேற்று மாலையில் ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,00-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலேயே தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 அதிகரித்து ரூ.1,07,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன?

வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+