Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: திடீரென சரிந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக உச்சம் தொட்டுள்ளது. நேற்று ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 1, 2025 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 12 மாதங்கள் முழுமையாக முடியாத நிலையில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

gold price Chennai gold

உச்சம் தொடும் தங்கம் விலை

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்டு நகை பிரியர்கள், ஏழை எளியோருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது தங்கம் விலை. இனி கனவில் தான் தங்கம் வாங்க முடியுமோ என்றும் கவலைப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதற்கு சில வாரங்கள் முன்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நேற்று முன் தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.

இன்றைய தங்கம் ரேட்

இன்று வாரத்தின் தொடக்க நாள் என்பதால் தங்கம் விலை மீண்டும் ஏறி அதிர்ச்சி கொடுக்குமா? இல்லை குறைந்து இன்ப அதிர்ச்சி தருமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை தான் இப்படி என்றால், வெள்ளி விலை அதைவிட ஜெட் வேகத்தில் செல்கிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கிராம் வெள்ளி ரூ.160 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.250ஐ தாண்டி விற்பனை ஆனது. ஒரு கிராம் நேற்று ரூ.285-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.4 குறைந்து ரூ. 281-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+