Gold Price Today: மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 சரிந்தது.. நகை பிரியர்கள் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.480 குறைந்து இருந்தது. நேற்று மாற்றமின்றி விற்பனை ஆன நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்து வருவதால் நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்கு அதிரடியாக உயர்ந்தது. அதற்கு பிறகும் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. பிப்ரவரி மாதம் பாதியில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.30 லட்சத்தை தொட்டது. இதனால் நகை பிரியர்கள் பெரும் கலக்கமடைந்தனர்.

Gold Price Drop Again 400 Fall in a Day Brings Cheer to Buyers

ஏறி இறங்கிய தங்கம் விலை

சாமானிய மக்களும் இனி எப்படி தங்கம் வாங்க முடியும் என கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் அதன்பிறகு சற்று குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து சரிந்து வந்தது. குறிப்பாக ஈரான் அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மேலும் குறைய தொடங்கியது. பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது.

நேற்று முன் தினம் திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்தது தங்கம் விலை. இதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,400-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.1,14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை நேற்று எந்த வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

21.04.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (இன்று)
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400 (நேற்று)
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880

18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760

13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+