Gold price Today: தங்கம் விலை இன்று மாற்றமில்லை.. நேற்று எவ்வளவு குறைந்தது? சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.1,14,400 - என்று உள்ள நிலையில் இன்று தங்கம் விலை குறையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஜனவரி 2025-இல் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக தங்கம் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தாலும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தான் தாறுமாறாக உயரத் தொடங்கியது.

gold price Chennai gold

உச்சம் தொட்டு சரிந்த தங்கம் விலை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்ததும் தங்கம் விலை தாறுமாறாக உயர காரணமாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என உயர்ந்து காணப்பட்டது.

அதற்கு பிறகும் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை ஈரான் - அமெரிக்கா போரின் போது குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரூ.1,12,400-க்கு விற்பனை ஆனது. பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன் தினம் செனையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை ஆனது.

இன்றைய விலை என்ன?

வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை ஆகின்றது. அதாவது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனை ஆகின்றது.

நேற்றைப் போலவே இன்றும் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400 (இன்று)

20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400 (நேற்று)
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560

14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+