படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!
சென்னை: அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தங்கத்தின் விலை உலகளாவிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் காணப்படுகிறது. சமீபத்தில் தங்க விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சிறிய சரிவுடன் நிலைத்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்கும் வாய்ப்பாக இந்த நேரம் இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் (Multi Commodity Exchange of India (MCX) தங்கத்தின் விலை கடந்த வாரம் அதிக மாற்றமின்றி சற்றே உயர்வை நோக்கி நகர்ந்து, 10 கிராமுக்கு ரூ.1,61,675 என்ற விலையில் முடிவடைந்தது. இது அதன் சாதனை உச்சமான ரூ.1,80,779 விலையிலிருந்து சுமார் ரூ.19,000 குறைவாக உள்ளது.
அதேபோல் சர்வதேச சந்தையில் காமெக்ஸ் தங்க விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 5,158.70 டாலராக முடிவடைந்தது. இது அதன் உச்சமான 5,626.80 டாலரைவிட சுமார் 468 டாலர் குறைவாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடையே தங்கம் வாங்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கம் விலை
இதுதொடர்பாகா தங்க சந்தை நிபுணர்கள் கூறுவதாவது," அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்தாலும் தங்க விலை அதற்கு ஏற்ப திடீரென உயரவில்லை. இதற்கான முக்கிய காரணமாக அமெரிக்க டாலரின் வலிமை குறிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க டாலர் வலுப்பெற்றுள்ளது. தற்போது அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 100 என்ற நிலையை நோக்கி நகர்ந்து வருவது தங்க விலை உயர்வுக்கு ஒரு தடையாக செயல்படுகிறது.
தங்கம் முதலீடு வாய்ப்பு
ஆனால் அதே நேரத்தில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகவே தொடர்ந்து பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசியல் மற்றும் புவியியல் பதற்றங்கள் நீடித்தால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பது சந்தையின் பொதுவான கருத்தாக உள்ளது. தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை ஒரு பெரிய வரம்புக்குள் நகர்ந்து வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,37,000 முதல் ரூ.1,65,000 வரை மாறக்கூடும் என அவர்கள் கணிக்கின்றனர். இந்த நிலையில் ரூ.1,65,000 என்ற விலையை மீறி விலை நிலைத்தால், உலக சந்தைகளில் தங்க விலை மீண்டும் வேகமாக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
உலக தங்க சந்தை நிலவரம்
சந்தை நிலவரத்தை பற்றிப் பேசிய முதலீட்டு ஆலோசகர் சுனந்தா சச்த்வா," அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து உலக சந்தைகள் பல்வேறு கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடுமையான வரி விதிப்பு அச்சுறுத்தல்கள், உலகளாவிய வர்த்தகத்தில் மாற்றங்கள், சர்வதேச அரசியல் தலையீடுகள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அதிக நிச்சயமின்மையை உருவாக்கியுள்ளன. மேலும், ஈரான் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட பதற்றம் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அமெரிக்கா
இந்த சூழலில் அமெரிக்கா தனது கவனத்தை கியூபா நோக்கியும் திருப்பக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கியூபா ஏற்கனவே எரிபொருள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலும் நிச்சயமின்மையை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க டாலர்
இத்தகைய நிலைமைகளில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீட்டு பொருட்களின் தேவை பொதுவாக அதிகரிக்கும். ஆனால் சமீப காலத்தில் அமெரிக்க டாலர் வலுப்பெற்றது தங்க விலை அதிகமாக உயர்வதை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் சந்தைகளில் உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி எனப்படும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு முன்பு ஜூலை மாதத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
திடீர் சரிவுகள்
இதுவும் தங்க விலை அதிகரிப்பை தற்காலிகமாக தடை செய்த காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் சந்தையில் திடீர் சரிவுகள் ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் தங்கள் பிற முதலீடுகளை காப்பாற்ற தங்க முதலீடுகளையும் விற்று பணமாக மாற்றும் நிலையும் காணப்படுகிறது. இதுவும் சமீபத்திய விலை சரிவுக்கு ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது.
தங்க விலை முன்னறிவிப்பு
முதலீட்டு ரீதியாக பார்க்கும்போது, தற்போது தங்க விலை நீண்டகால உயர்வு போக்கில் தான் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொன்முடி என்ற முதலீட்டு ஆலோசகர் கூறியதாவது, சர்வதேச சந்தையில் தங்க விலை முக்கிய ஆதரவு நிலைகளுக்கு மேல் தான் உள்ளது. குறிப்பாக 5,000 முதல் 5,100 டாலர் வரை உள்ள பகுதி வலுவான ஆதரவு நிலையாக உள்ளது.இந்த நிலையை தாண்டி 5,200 டாலர் அளவை தங்க விலை மீறி நிலைத்தால், அடுத்த கட்ட உயர்வாக 5,400 முதல் 5,600 டாலர் வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
சந்தை நிபுணர்கள்
இந்த உயர்வு 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, உலக அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமின்மை காரணமாக தங்கம் இன்னும் பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தங்க விலையில் ஏற்படும் சரிவுகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்கும் வாய்ப்பாக அமையலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு











Click it and Unblock the Notifications