ஒரே வாரத்தில் 2,000 சரிந்த தங்கம் விலை.. இன்றும் அதிரடியாக குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி!
சென்னை: வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து நகை பிரியர்களை கலங்க வைத்த தங்கம் விலை சமீப நாட்களாக சரிந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 7 நாட்களில் சவரனுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் சரிந்துள்ளது. இதனால், தங்கம் விலை இன்றும் குறைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து உள்ளது.
சர்வதேச சந்தை பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தாறுமாறாக உயர்ந்தது. அதிலும் இந்த ஆண்டு உலக அளவில் போர் பதற்றம் அதிகரித்ததால், விலை கடுமையாக உயர்ந்தது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டது. இதனால் இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியுமோ என நினைக்கும் அளவுக்கு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது.
அதன் பின்னர் 21-ம் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. 21-ம் தேதி கிராமுக்கு ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை சரிந்து வருகிறது. 25-ம் தேதி தங்கத்தின் விலை கிராம் ரூ.9,070 எனவும், சவரன் ரூ.72,560 ஆகவும் விற்பனையானது. 26- ம் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றும் அதிரடியாக குறைந்தது
நேற்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880-க்கு விற்பனையானது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் சரிந்துள்ளது. அதேநேரத்தில் நேற்று வெள்ளி கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றைய தினமும் விலை குறையுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய ரேட் என்ன?
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.55 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,930க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.119க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்
28.06.2025- ஒரு சவரன் ரூ.71,440 (இன்று)
27.06.2025- ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications