Gold Price: வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சென்னையில் ரேட் என்ன?
சென்னை: இன்று தங்கம் விலை (Gold Price) குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து இருக்கிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. பெரிய அளவில் உயராமலும், பெரிய அளவில் குறையாமலும் சுமார் ஒரு சவரன் ரூ.1,15,000 என்ற அளவிலேயே இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பாதியில் ஒரு சவரன் ரூ.1.30 லட்சம் வரை சென்ற நிலையில் அதற்கு பிறகு குறைய ஆரம்பித்த தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.

இன்று தங்கம் விலை குறைந்தது
சென்னையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,12,400 என்ற அளவில் விற்பனை ஆனது. அதன்பிறகு ஓரிரு நாளில் விலை குறைந்தாலும், பெரும்பாலும் அதிகரிக்கவே செய்தது. இதனால் நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் ரூ.1,14,880 -க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை ஆனது. அதேசமயம் நேற்று அட்சய திருதியை என்பதாலும் தங்கம் வாங்க நகைக்கடைகளில் நகைபிரியர்கள் குவிந்தனர். ஒரு கிராம் வாங்கினாலும் போதும் என்ற ரீதியில் பலரும் நகைக்கடைக்கு சென்று நகைகள் வாங்கினர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய ரேட் என்ன?
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 22,744 என்று இருந்தது. 10 வருடம் கழித்து ரூ.1,14,880-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400 (இன்று)
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880 (நேற்று)
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400












Click it and Unblock the Notifications