படக்குனு படுத்துருச்சே தங்கம்..வருஷ கடையில் விலை சரிய காரணமென்ன? போட்டுடைத்த நகைக் கடை உரிமையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து உச்சத்தை சந்தித்த தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையை கடந்தது. இந்த நிலையில் ஆண்டின் இறுதி நாளான இன்று ஒரே நாளில் இரு முறை தங்கத்தின் விலை சரிந்து ஒரு லட்சத்திற்குள் வந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் தற்போது திடீரென விடை சரியா காரணம் என்ன என்பது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. சவரனுக்கு ரூ.1 லட்சம் கடந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட தங்கம், தற்போது பெரிய சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கு விற்பனையாகி வருகிறது.

அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.12,480க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.257க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் நகை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் கவனம் செலுத்தும் வகையில் உள்ளது.

Gold Gold Prices Returns

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் வரலாற்றிலேயே புதிய உச்சத்தை தொட்டு, ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது. பின்னர் சில நாட்கள் ஏற்ற இறக்கமாக இருந்த விலை, டிசம்பர் 27ஆம் தேதி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாயாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. வெள்ளியும் அதேபோன்று கிலோவுக்கு ரூ.2.85 லட்சமாக அதிகரித்தது. ஆனால் அதன் பின்னர் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு, சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.640 குறைந்த நிலையில், நேற்று மேலும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதனுடன், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து சவரனுக்கு ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 3வது நாளாக தங்கம் விலை சற்றே குறைந்து வருவதாக சந்தையில் கருத்து நிலவி வருகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 சரிந்து ரூ.12,550க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் ரூ.70 வரை சரிந்து, தற்போது கிராமுக்கு ரூ.12,480 என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சவரன் விலையில் ரூ.560 சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257க்கு விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு அருகில் இருக்கும் சூழலில் தங்கம் விலை குறைவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே சிறு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்ததே என நகைக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ''

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தக்குமார் பேசும் போது, " கடந்த வாரம் கிறிஸ்துமஸ் காரணமாக சர்வதேச வங்கிகள் விடுமுறையில் இருந்ததால், முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கி குவித்ததாகவும், அதன் காரணமாக விலை உயர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது குறுகிய கால லாபத்தை நோக்கி அவர்கள் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியதால் விலை குறைந்திருக்கிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது," என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+