Gold Rate Today: தை முதல் நாளில் எகிறிய தங்கம் விலை.. இன்று புதிய உச்சம்! நகை பிரியர்கள் ஷாக்!
சென்னை: தை முதல் நாளான இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.13,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று விற்பனையாவது புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டது. இது தங்க நகை பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்பிற்கு ஏற்ப இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.13,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று விற்பனையாவது புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,090க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.3,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி 1 முதல் தங்கம் விலை
15.01.2026 (இன்று) - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications