Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இன்று அதிரடியாக உயர்வு! நகை பிரியர்கள் ஷாக்
சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்தது. இதனால் இன்று தங்கம் விலை குறையும் என நகைபிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், தங்கம் விலை நேற்றைய சரிவை ஈடுகட்டும் அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகை வாங்க திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அதிரடியாக அதிகரித்து வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் சரிந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனால், கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சவரன் ரூ.58 ஆயிரத்திற்கு விற்ற தங்கம் விலை தற்போது 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று குறைந்த தங்கம் விலை
தினம் தினம் புதிய உச்சம் தொட்டு தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத உச்சம் நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கம் விலை குறையும் ஒரு சில நாட்கள் கழித்து வாங்கலாம் என எண்ண முடியாத அளவிற்கு தினமும் விலையானது ஏறி இறங்கி அதிர வைத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிதும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 520 குறைந்து ரூபாய் 71,520க்கு விற்பனை ஆனது.
இன்று விலை எவ்வளவு?
இதனால் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் தங்கம் விலை இப்படி தடாலடியாக அதிகரிக்க வில்லை. உதாரணத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ. 35,936க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே கடந்த 2022 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் ஒரு சவரன் ரூ.40,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால் ஒரு ஆண்டுக்கு 4,700 ரூபாய் தான் கூடியிருந்தது.
2 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது?
இதே காலக்கட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் விலை ரூ.44,480க்கும், கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 58,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பெரிய அளவில் தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது.
குறிப்பாக தினம் தினம் தற்போது புதிய உச்சம் தொடும் அளவுக்கு தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் புதிய வரி விதிப்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளின் பொருட்கள் மீது பரஸ்பர வரியை விதித்ததும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் மத்தியில் வர்த்தக, பொருளாதார ரீதியில் போர் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக பலரும் தங்கத்தின் மீது முதலீடுகளை செய்து வருகிறார்கள். தங்கம் விலையின் அதிரடி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications