வல்லுநர்கள் சொன்ன மாதிரியே நடக்குதே.. தங்கம் போச்சு! இப்போ போய் வெள்ளியை வாங்குங்க! எல்லாமே மாறிடும்
டெல்லி: சமீப மாதங்களில், தங்கத்தின் விலை உலக அளவிலும், இந்தியாவிலும் சரிந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,661 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,856 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,296 ஆகவும் உள்ளது.
தங்கத்தோடு ஒப்பிடுகையில் வெள்ளி விலை ஒப்பீட்டளவில் மந்தமாகவே உள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹108.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,08,900 ஆகவும் உள்ளது.
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக லாபத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுநர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி இடையிலான விகிதம் ஆகும். இந்த விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது. அதாவது தங்கம் வெள்ளி வேறுபாட்டை வைத்து இந்த விகிதம் நிர்ணயிக்கப்படும். கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.

ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.
அவர்கள் எச்சரித்தபடியே தற்போது தங்கம் விலை சரிகிறது. இதனால் அடுத்து கண்டிப்பாக வெள்ளி விலை உயரும். தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,119.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3179 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3179 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 23,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது.












Click it and Unblock the Notifications