நினைச்சு கூட பார்க்க முடியாது..தங்க மார்க்கெட்டில் பிரளயம் வரப் போகுது! ஒரு சவரன் 1.75 லட்சம் ஆகுமா?
சென்னை: கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், வருகிற ஒரு ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.74 லட்சம் வரை உயரக்கூடும் என்ற கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதனால் தங்க நகை தயாரிப்பு துறை கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியும் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு உலகளவில் தங்கம் விலை இடைவிடாது உயர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களில் குறிப்பாக அக்டோபரில் தான் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் சாதனை உயர்வை தொட்டது என்றே சொல்லலாம்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,000 என இருந்த நிலையில், கடந்த மாதம் 17ஆம் தேதி அது ரூ.97,000 வரை சென்றது. இதன்பிறகு கடந்த சில நாட்களாக தங்க விலை சரிவடைந்து வந்தாலும், திடீர் ஏற்றமும் இறக்கமுமாக சந்தை குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தங்கம் விலை
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.92,320 க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,540 க்கும் விற்பனையாகி இருந்தது. தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்திருக்கிறது. அதே நேரத்தில், தங்கத்தின் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகும் என்ற கணிப்புகள் சொல்வதால், பலரும் தங்கத்தை முதலீடாக வாங்கலாமா என குழப்பத்தில் உள்ளனர்.
தங்கம் விலை
மேலும், பெண்களின் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளிலும், வீட்டில் பணத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான முதலீடாகவும் தங்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் விலை அதிகரிப்பால், முந்தைய காலத்தில் ஒரு பவுன் தங்கம் வாங்கிய விலைக்கு தற்போது அதன் பாதிக்கும் குறைவான அளவே வாங்க முடிகிறது. இதனால் தங்கம் வாங்குபவர்களுக்கும், நகை தயாரிப்புத் துறைக்கும் பெரும் சவாலாக விலை உயர்வு மாறியுள்ளது.
1 சவரன் விலை
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.74 லட்சம் வரை உயரக்கூடும் என்பதால் வரிக்குறைப்பு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள நகை வியாபாரிகள், கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.93,840 என இருந்தது. சனிக்கிழமை அது ரூ.91,840 ஆகவும், நேற்று அது மேலும் குறைந்து ரூ.91,680 ஆகவும் விற்பனையானது. விலை குறைந்தாலும், வருகிற நாட்களில் தங்கத்தில் மேலும் பெரிய உயர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை அதிகரிக்குமா?
ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,500 அமெரிக்க டாலர் வரை உயரலாம். இது இந்திய ரூபாயில் கணக்கிட்டால், ஒரு சவரன் தங்கம் ரூ.1.74 லட்சம் வரை உயரும் நிலை உருவாகும். அடுத்த 12 மாதங்களில் இந்த உயர்வு நடைபெறும் எனவும் அமெரிக்க நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தங்கத்தின் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 6% இறக்குமதி வரியை 2% ஆகவும், ஜிஎஸ்டி 3% வரியை 1.5% ஆகவும் குறைக்க வேண்டும் என கோவை மற்றும் நாடு முழுவதும் உள்ள தங்க நகை சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தங்க விலை உயர்வால் நகை தயாரிப்புத் துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்குவதிலிருந்து பின்வாங்கும் சூழல்கள் உருவாகி உள்ளன என்பதே இவர்களின் வாதம்.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
Gold Rate: ஈரான் போர் எதிரொலி! தங்கம் விலை கிடுகிடு! மாலை நல்ல செய்தி? -
Gold Rate: சென்னையில் தங்கம் விலை சரிவு! காலையில் கூடிய வேகத்தில் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications