1 மாதத்தில் இல்லாத அளவிற்கு.. விலை குறைந்த தங்கம்.. ஆனாலும் இப்போ வாங்காதீங்க.. வல்லுனர்கள் அட்வைஸ்
சென்னை: இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிந்து, சில்லறை விலையில் நகை வாங்குவோர் மத்தியில் மேலும் விலை குறையலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1 மாதத்தில் மிக குறைந்த விலையை இதன் மூலம் தங்கம் அடைந்து உள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்ததே இந்தியாவில் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணம். தங்கத்திற்கான தேவை குறைந்து, தொடர்ந்து இரண்டாவது வாரமாக சர்வதேச தங்க விலை சரிந்து வருகிறது. இதனால் தங்கம் வாராந்திர இழப்பைச் சந்தித்துள்ளது.
திங்கள்கிழமை அன்று, இந்தியாவில் தங்கம் விலை ஒரு மாத குறைந்தபட்ச அளவை எட்டியது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 97,260 ஆகவும், 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 89,150 ஆகவும் குறைந்துள்ளது. இதேபோல், 18 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 130 குறைந்து ரூ. 72,940 ஆக விற்பனையாகிறது.
இருப்பினும், 2024-25 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கம், குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக வைத்துள்ளன. அதன் விளைவுகள் குறித்த யூகங்களும் நிலவி வருகின்றன.

தங்கம் மேலும் குறையும்
ஆனால் இப்போது தங்கம் வாங்குவதை விட அடுத்த சில நாட்களுக்கு பின் தங்கம் வாங்குவதே சரியாக இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் போர் காரணமாக கச்சா எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் இனி அப்படி இல்லை.
சர்வதேச அளவில் வர்த்தக போர்களும் முடியும் நிலை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முடிவிற்கு வந்துவிட்டது. மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பும் அனைத்து விதிமுறைகளுக்கும் உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, இந்திய வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளரும், இந்த பேச்சுவார்த்தை குழு தலைவருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு வாஷிங்டனில் உள்ளது.
இதனால் தங்கள் விலை மேலும் சரியும். எல்.கே.பி செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி ஆய்வாளர் ஜதின் திரிவேதி கருத்துப்படி, Comex சந்தையில் தங்கம் விலை ரூ.96,000க்கு கீழ் சென்றது. சர்வதேச அளவில் போர்கள் முடிந்துவிட்டன. அதேபோல் வர்த்தக போர் முடியும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் தங்கம் மீதான மதிப்பு குறைய தொடங்கிவிட்டது, என்றுள்ளார்.
இதன் காரணமாக தங்கத்தில் இனி வரும் நாட்களில் முதலீடு செய்தால் அது எளிமையாக இருக்கும். எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications