Gold Rate Today: 4 நாட்களாக கடுமையாக எகிறிய தங்கம் விலை! நாளை மார்க்கெட் திறந்ததும் என்ன ஆகப்போகுதோ?
சென்னை: தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 5,920 அதிகரித்தது. இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலைக்கே அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 ரூபாய் 13,965க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உலக பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கம்
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.1,05,600 என இருந்தது. 5 ஆம் தேதி திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வியாழக்கிழமையும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
4 நாட்களில் அதிரடி உயர்வு
வெள்ளிக்கிழமை காலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி முந்தைய நாள் விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.65 உயர்ந்து ரூபாய் 1,3,965க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 5,920 உயர்ந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால், தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படும். நாளை திங்கட்கிழமை, தங்கம் விலை மீண்டும் எகிறுமா என்ற கவலை தங்க நகை பிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440


Click it and Unblock the Notifications
