Gold Price Today: மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: தங்கம் விலை (Gold Price) இன்று மீண்டும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் இன்று காலை, மாலை என இருமுறை உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,18,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைப் போலவே இன்றும் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தாறுமாறாக ஏறி வந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்தை கடந்தது. அதோடு நிற்காமல் மின்னல் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.

நேற்று குறைந்த தங்கம் விலை
அதாவது கடந்த மாதம் 29 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400-க்கு விற்பனையானது. குறைந்தபட்சமாக ஜனவரி 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையானது. ஒரே மாதத்தில் இப்படி வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்தது நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பிறகு தங்கம் விலை தடாலடியாக குறைந்தது.
பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. அதன்படி நேற்றும் தங்கம் விலை குறைந்து இருந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,16,640 -க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,580-க்கு விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் விலை என்ன?
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து 14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ. 1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மேலும் அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தங்கம் விலை மாலையில் மேலும் உயர்ந்து, ஒரு சவரன் சென்னையில் ரூ.1,18,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.14,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலை நீடிக்கிறது. தங்கம் விலை கடந்த நாட்களை ஒப்பிடும் போது சற்று குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து இருப்பது நகை பிரியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
விலை உயர காரணம்
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருவதும், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் ஆகியவற்றால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.
இதேபோன்று பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் பலரும் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை:
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320 (இன்று மாலை)
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800 (இன்று காலை)
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications