Gold rate today: ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் 11 ஆயிரத்தை தாண்டியது.. வரலாற்றில் இல்லாத புது உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold rate today) தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை கலங்க வைத்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்றாவது தங்கம் விலை குறைந்து சற்று ஆறுதல் கொடுக்குமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.110 அதிகரித்து இதுவரை வரலாற்றில் இல்லாத அளவாக புது உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

gold price Chennai gold

ஒரு லட்சத்தை தொடும்

தங்கம் விலை எவ்வளவு கூடினாலும் அதன் மீதான ஈர்ப்பு மக்களிடம் குறையவில்லை. அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடாக மட்டும் இல்லாமல், அணிகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் தங்க ஆபரணங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஓரிரு வாரங்களில் தீபாவளி பண்டிகையும் வர உள்ள நிலையில், நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவது அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு தினம் தினம் புதிய உச்சம் தொட்டு, மக்கள் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. போகிற போக்கை பார்த்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை எட்டினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

இன்றும் அதிரடியாக உயர்ந்தது

சனிக்கிழமையில், ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இதனால், இன்றைய விலை எப்படி இருக்கும்? நகை வாங்க செல்லலாமா? என ஆர்வத்துடன் நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு கூடும் என்பதைக் காத்திருந்து, எதிர்பார்ப்புடன் நகை பிரியர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகின்றது.

இன்றைய தங்கம் விலை என்ன?

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.880 அதிகரித்து ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி கிராமுக்கு சென்னையில் ஒரு வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.166-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினம் தினம் புது உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்றும் மேலும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப் பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

06.10.2025 - ஒரு சவரன் ரூ.88,480 (இன்று)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+