Gold Rate Today: இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இறங்கிய வேகத்தில் ஏறியது.. 2 நாட்களில் ரூ.1,200 உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், நேற்றும் விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியே கிடைத்தது. இதனால் இன்றாவது தங்கம் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. 2 நாட்களில் மட்டும் ரூ.1200க்கு மேல் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இறங்கிய வேகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி வரை விலை கிடுகிடுவென உயர்ந்து நகை பிரியர்களை அதிரவைத்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை சரியத் தொடங்கியது. அந்த வகையில் 23 ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரையிலான இடைபட்ட 8 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 560 குறைந்தது.

gold price Chennai gold

8 நாட்களாக குறைந்து வந்தது

வரலாறு காணாத உச்சம் தொட்டு நகை பிரியர்களை அதிர வைத்த தங்கம் விலை மளமளவென குறைந்ததால், தங்க நகை பிரியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பலரும் தங்கம் வாங்க நகை கடைக்கு படையெடுக்க தொடங்கினர். இதற்கிடையே, நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று விலை திடீரென உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 915-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105- உயர்ந்து நகை பிரியர்களை அதிர வைத்தது. சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து அதிர வைத்தது.

திடீரென உயர்ந்த தங்கம் விலை

ஒரு கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், நேற்றும் விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியே கிடைத்தது.

திருமண வீடுகள், போன்ற விசேஷத்திற்கு பரிசாக தங்கம் நகை அளிக்க இருந்தவர்களும் விலை தொடர்ச்சியாக குறைந்ததால், மேலும் குறையுமா என எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று விலை உயர்ந்ததது நகை பிரியர்களை தூக்கி வாரிப்போட்டது. இந்த நிலையில்தான் இன்றாவது தங்கம் விலை குறையுமா? என எதிர்பார்த்த நிலையில், நேற்றைப் போலவே இன்றும் தங்கம் விலை ஷாக் கொடுத்தது.

இன்றும் அதிரடியாக உயர்வு

நேற்று ஒரு சவரன் ரூ. 71,320க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.360 உயர்ந்து ரூ. 72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று சென்னையில் ரூ. 15 உயர்ந்து 9065க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, இன்று என இரண்டே நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை 1200 அதிகரித்துள்ளது. இறங்கிய வேகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்

01.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,520 (இன்று)

01.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,160

30.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
28.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
27.06.2025 - ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2024 - ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025 - ஒரு சவரன் ரூ.71,960
26.05.2025 - ஒரு சவரன் ரூ.71,600
25.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025- ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025- ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025- ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025- ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,840

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+