Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்
சென்னை: தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. 2 ஆம் தேதி மட்டும் குறைந்த நிலையில் மற்ற நாட்களில் விலை அதிகரித்து வருகிறது. நேற்றும் உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு உச்சத்தை தொட்டது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஆனால் பிப்ரவரிக்கு பிறகு சிறிது குறைய தொடங்கியது. அதிலும் குறிப்பாக ஈரான் - அமெரிக்கா போர் ஆரம்பித்த பிறகு தங்கம் விலை மேலும் சரிந்தது.

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம்
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில் அன்றில் இருந்தே விலை குறையத் தொடங்கியது. தற்போது மார்ச் மாதம் முழுவதுமாக முடிந்த நிலையில் தங்கம் விலை பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது குறைந்தே இருக்கிறது. இதனால் நகை பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஏப்ரல் பிறந்த முதல் நாளே தங்கம் விலை சட்டென பறந்தது.
ஒரே நாளில் ரூ.3,040 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அடுத்த நாள் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதனால் மேலும் குறையும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றும் சென்னையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது.
தங்கம், வெள்ளி விலை என்ன?
நேற்று சென்னையில் ஒரு சவரன் ரூ.800 அதிகரித்து ரூ.1,10,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 100 அதிகரித்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலையில் இன்று எந்த வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (இன்று)
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400
31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications