Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக்
சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று முன் தினம் காலையில் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் மாலையில் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஆனால் நேற்று தங்கம் விலையானது குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இன்று மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை இன்றும் குறையுமா என்ற எதிர்பார்த்து இருந்த நகைபிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தங்கம் விலை தொடர்ச்சியாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. உயரும் போது ராக்கெட் வேகத்திலும், குறையும் போது ஆமை வேகத்திலும் குறைகிறது. கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது.

உச்சம் தொட்ட தங்கம் விலை
கடந்த ஆண்டு ஒரு தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரம் அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.12,150 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்கும் உயர்ந்தது. ஒரு லட்சத்தை தொட்டுவிடுமோ என பயந்து வந்த நிலையில் 1.25 லட்சம் என்ற வரலாற்று உயர்வை கண்டது தங்கம் விலை.
ஜனவரி மாதத்தில் இருந்து மின்னல் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை தினம் தினமும் புது வரலாற்று உச்சத்தை தொட்டது. பிப்ரவரி மாதம் பாதியில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை தாண்டி விற்பனை ஆனது. இதன்பிறகு தங்கம் விலை சரிவதும், பின்னர் ஏறுவதுமாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,26,200 என்ற அளவில் இருந்தது.
நேற்று அதிரடியாக குறைந்தது
அதன்பிறகு தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் சீராக குறைந்து வருகிறது. படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை ரூ.1,03,000 என்ற அளவுக்கும் குறைந்தது. ஆனால் மீண்டும் தங்கம் விலை தற்போது உயரத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று முன் தினம் காலையில் தங்கம் விலை பெயரளவுக்கு ரூ.480 குறைந்தது. ஆனால் மாலையில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது.
சென்னையில் நேற்று முன் தினம் ரூ.1,10,160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 380 அதிகரித்து 14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து இருப்பது நகை பிரியர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
வெள்ளி விலை என்ன?
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தை போலவே வெள்ளி விலையும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.15 அதிகரித்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (இன்று)
31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (நேற்று)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications