Gold Price Meme: “10 பவுன்ல தாலி ready!”னு சொன்ன நடிகர் விஷால்! இப்ப தாலி cancelனு சொல்லிட்டாரே!
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற பாடலை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் புதுவகையான வீடியோவை போட்டுள்ளார்கள். பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது.
நேற்று வரை இரு நாட்களில் சவரனுக்கு 1100 ரூபாய் குறைந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1360 உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.170 அதிகரித்து ரூ11,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை அதிகரித்தது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை தீபாவளிக்கே ரூ 1 லட்சத்தை தொடும் என கூறியிருந்த நிலையில் தற்போது 91 ஆயிரத்திற்கும் 93 ஆயிரத்திற்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த தங்கம் விலை உயர்வை வைத்து சிலர் மீம் ரெடி செய்துள்ளார்கள். அதாவது விஷாலுக்கும் அதை டேக் செய்துள்ளனர். விஷால் நடித்த "தாமிரபரணி" படத்தில் இடம் பெற்ற "தாலியே தேவையில்லை.." பாடலை வைத்து செய்திருக்கிறார்கள். அந்த பாடலில், "பத்து பவுனு பொன் எடுத்து கங்கு குள்ள காய வச்சி தாலி ஒன்னு செய்ய போறேன் மானே மானே" என பாடுவார்.
ஆனா டேய் கொஞ்சம் ஓவரா போறீங்கடா 😂😂 @VishalKOfficial pic.twitter.com/Wda8wwxk5E
— Rajaguru (@swatson2024) November 20, 2025
இதையும், அந்த பாடலின் முதல் வரியான, "தாலியே தேவையில்லை" என்ற பாடலையும் இணைத்துதான் இந்த மீம் உருவாகியுள்ளது. தங்கம் விலை உயர்வதற்கு முன்பு "10 பவுன் பொன் எடுத்து கங்கு குள்ள காய வச்சி தாலி ஒன்னு செய்ய போறேன் மானே மானே" என வருகிறது. இதே தங்கம் விலை உயர்ந்த பிறகு, "தாலியே தேவையில்லை நீ தான்.. என் பொண்டாட்டி.." என்ற வரியை இணைத்து ஒரு கலக்கல் மீம் ஆக்கியுள்ளனர்.
இதை விஷாலுக்கும் டேக் செய்து வைரலாகி வருகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நடுத்தர ஏழை எளிய மக்களால் தங்கம் வாங்க முடியாத சூழல் எழுந்துள்ளது.
அந்த வகையில் தாலி என்பது அரை பவுனில் போட வேண்டியது. இன்றைய விலைக்கு செய்கூலி, சேதாரம் எல்லாமே சேர்த்து வாங்கினால் 48 ஆயிரத்திற்கு வந்துவிடும். தாலிக்கே 48 ஆயிரம் என்றால் மற்ற உருப்படிகளை வாங்க வேண்டும். சிலரால் மஞ்சள் கயிற்றை மெயின்டெய்ன் செய்ய முடியாது என்பதால் தாலி சரடு வாங்க நினைப்பார்கள்.
அது குறைந்தது 3 பவுனாவது இருக்க வேண்டும். அதற்கு எங்கே போவது? ஒரு பவுன் 40 ஆயிரம் என்றால் 10 பவுன் வாங்கினால் கூட 4 லட்சம் ரூபாய்தான் ஆகும். ஆனால் இன்று ஒரு பவுன் 93 ஆயிரம் என்பதால் 10 பவுன் வாங்க ரூ 9.30 லட்சம் தேவைப்படுகிறது.
இந்த பணம் ஒரு கட்ட முன்பணமாக கொடுத்து வருகிறோம். இதற்கு மேல் ஒரு 70 ஆயிரம் ரூபாயாக போட்டால் 10 லட்சம், இதை முன் பணமாக கொடுத்து மேலும் 30 லட்சம் ரூபாய்க்கு லோனை போட்டு ஒரு தனி வீட்டையே கட்டிவிடலாம்! இனி டிரென்ட் இப்படித்தான் ஆகும் போல! எனினும் மண்ணின் மீதும் பொன்னின் மீதும் போட்ட காசு என்றைக்கும் சோரம் போகாது!












Click it and Unblock the Notifications