Baba Vanga Gold prediction: தங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா? பாபா வங்கா கணிப்பை பாருங்க
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா என்பது குறித்து பாபா வங்காவின் கணிப்புகளை பார்க்கலாம். இந்த கணிப்புகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் ஒரு சரிவைக் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், இப்போது மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தங்கம், வெள்ளி விலை குறைந்தபோது சிலர் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த விற்றனர், அதே சமயம் பலர் குறைந்த விலைகளில் வாங்கி லாபம் சம்பாதித்தனர். இத்தகைய நிலையற்ற விலை மாற்றங்களை ஆய்வாளர்களாலும் துல்லியமாக கணிக்க முடிவதில்லை.
தீர்க்கதரிசி பாபா வங்கா
இந்த சூழ்நிலையில், பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான சில கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. அவரது கணிப்பின்படி, உலக அளவில் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு வங்கிகள் பாதிக்கப்படலாம் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
தங்கத்தில் முதலீடு
இதனால், தங்கத்தில் மேலும் முதலீடு செய்யலாமா அல்லது கையில் உள்ளதை விற்றுவிடலாமா என்ற மனக் குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில், தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.1.59 லட்சமாக உள்ளது. இந்த விலை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தாலும், நகைகள் வாங்க நினைப்பவர்களின் பட்ஜெட்டை இது பெரிதும் பாதிக்கிறது. இதனால், தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்துவிட்டதா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
பாபா வங்கா கணிப்பு
2026ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகும் என்று பாபா வங்கா கணித்துள்ளாராம். இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் தள்ளும். இதனால், தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து, 10 கிராம் தங்கம் ரூ.1.63 லட்சம் முதல் ரூ. 1.82 லட்சம் வரை ஒரு புதிய உச்சத்தை எட்டும் என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.
வெறும் யூகங்கள்
ஆனால், பாபா வங்காவின் இந்தக் கணிப்புகள் வெறும் யூகங்களே தவிர, அவற்றுக்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமோ அல்லது வரலாற்றுப் பதிவுகளோ இல்லை என்று ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
வட்டி விகிதங்கள்
உலக வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசியல் பதட்டங்கள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் எனப் பல காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியான கவலைகள் தங்கத்தின் விலையை உயர்த்துவது உண்மைதான் என்றாலும், அந்தச் சிக்கல்கள் தீரும்போது விலை குறைவதும் சகஜம்.
பீதி வேண்டாம்
ஆகவே, முதலீட்டாளர்கள் வெறும் வதந்திகளைக் கேட்டு பீதியடையாமல், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தங்களுடைய நீண்டகால முதலீட்டுத் திட்டத்தில் உறுதியாக இருப்பது முக்கியம். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், வெறும் வதந்திகளை நம்பி அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்க வேண்டாம் என்று நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பாபா வங்கா யார்
பாபா வங்காவுக்கு சிறு வயதிலேயே ஒரு விபத்தில் பார்வையை இழந்தார். இவர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து சொல்லி வந்தார். உலக அரசியல், இயற்கை பேரழிவுகள், போர்கள், உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications