ஜெட் வேகத்தில் போச்சே தங்கம் விலை.. இன்னைக்கு படக்குனு சரிஞ்சுருச்சே! இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்க விலை, நேற்று சவரனுக்கு ரூ.1,760 வரை அதிகரித்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.100 குறைந்து ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 92,800க்கு விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்த நிலையில், பண்டிகைக்குப் பிறகு திடீரென குறைந்தது. இதனால் திருமண நகை வாங்க திட்டமிட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், தங்க முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் அக்டோபர் 22ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,680 வரை சரிந்தது. அதன்பின் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.89,000க்கும் கீழ் விற்பனையாகியது. இது கடந்த சில மாதங்களில் மிகக் குறைந்த விலை என்ற சாதனையாக பதிவாகியது.
தங்கம் விலை
பொதுவாக தீபாவளி காலத்தில் தங்கம் வாங்கும் போக்கு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு பிறகு விலை திடீரென சரிந்ததால், நகை கடைகளில் விற்பனை மந்தமானது. பலரும் விலை மீண்டும் குறையும் எனக் காத்திருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்ததோடு, டாலர் மதிப்பு குறைந்ததும், விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,300-க்கு விற்பனையாகியிருந்தது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினம் காலையில், மேலும் ரூ.1,760 உயர்ந்து சவரனுக்கு ரூ.93,600 என்ற விலையில் விற்பனையானது. வெள்ளி விலையும் இதனுடன் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.170க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இன்றைய தங்கம் விலை
பண்டிகை காலம் முடிந்திருந்தாலும், விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் பெண்களிடம் நகை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் கூறியிருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1,760 வரை அதிகரித்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.100 குறைந்து ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 92,800க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை அதிகரிக்குமா?
தங்கத்தின் விலை ஏற்றம் தற்காலிகமாக இருக்கலாம். உலக சந்தை நிலைமைகள் அமைதியானால் மீண்டும் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் தற்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்துகின்றனர் பொருளாதார நிபுணர்கள். இதனால், தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள் சில நாட்கள் காத்திருந்து சந்தை நிலையை கவனிக்க வேண்டுமா? அல்லது உடனே வாங்க வேண்டுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும், திருமண சீசன் தொடங்கும் நிலையில் தங்கக் கடைகளில் மீண்டும் கூட்டம் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications