ரோலர் கோஸ்டர் மாதிரியே! சர்றுனு ஏறுது.. படக்குனு சரியுது! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
சென்னை: சர்வதேச அளவில், தங்கத்தின் விலை ரோலர் கோஸ்டர் போல கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை அடுத்த நாட்களில் குறைய ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன? பொதுமக்கள் தங்கம் வாங்கலாமா? என்பது குறித்து பார்க்கலாம்..
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகச் சீராக இல்லாமல், ஏற்றம் மற்றும் இறக்கம் என மாறி மாறி பயணித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார நிலைமைகள், டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் போக்குகள் போன்ற பல காரணிகள் இதற்கு காரணமாக உள்ளன.

கடந்த மாதம் (அக்டோபர்) நடுப்பகுதியில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக அக்டோபர் 17ஆம் தேதி, தங்கம் விலை திடீரென அதிகரித்து, முதலீட்டாளர்களையும் நகைக் விற்பனையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் சில நாட்களில் சந்தை நிலைமை மாறி, விலை குறையத் தொடங்கியது.
தங்கம் விலை
அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. அதன்பின் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 சரிந்தது. இதனால் தங்கம் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்குக் கீழ் விற்பனையாகியது. இது கடந்த சில மாதங்களில் மிகக் குறைந்த விலையாகப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் மாறி மாறி நிகழ்ந்து வருகிறது. சில நாட்களில் ரூ.90 ஆயிரம் மீறி விலை உயரும் நிலையில், மறுநாள் அதே விலை மீண்டும் குறையும் தன்மை காணப்படுகிறது.
தங்கம் விலை இன்று
இந்த மாறுபாடு, தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும், திருமண நகை வாங்க திட்டமிடுவோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபமாக சில நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்வு ஏற்பட்டுள்ளது.
தங்க விலை மாற்றம்
இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய விலையே தற்போது நடைமுறையில் உள்ளது. தங்கம் விலை அடுத்த சில நாட்களில் மேலும் சிறு அளவில் மாறக்கூடும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
தங்கச் சந்தை
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையிலும், அமெரிக்க வட்டி விகித மாற்றங்களிலும் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், தங்கம் விலை ஏற்ற இறக்கமாகச் செல்கிறது. மேலும், இஸ்ரேல்-காசா போர், உலக அரசியல் பதற்றம், மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தங்க சந்தையை நேரடியாக பாதிக்கின்றன. த்தத்தில், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ரோலர் கோஸ்டர் போல் மாறி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விலை நிலைமை சீராகும் வரை காத்திருக்கிறார்கள் என்கிறார்கள் தங்க சந்தையை உற்றுநோக்கும் பொருளாதார ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications