Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price Today: திடீரென சரிந்த தங்கம் விலை.. 4 நாட்கள் உயர்வுக்கு பின் குறைந்தது! இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த வாரம் தொடர்சியாக குறைந்து வந்த நிலையில் 21 ஆம் தேதி திடீரென உயர்ந்தது. பின்னர் தொடர்ச்சியாக தினம் தினம் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று தான் சற்று குறைந்து இருக்கிறது. கடந்த நான்கு நாட்கள் விலை உயர்வுக்கு இன்று பிரேக் போட்டுள்ளது தங்கம் விலை.

அமெரிக்க அதிபராக டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாளுக்கு நாள் தங்கம் விலை உயரத் தொடங்கியது. தினந்தோறும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தொட்டது.

Gold Price Today Gold Falls Suddenly After 4 Days of Continuous Rise What s the Rate Today

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் ரேட்

இதற்கு பிறகாவது குறையும் என நகை பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டது. குறிப்பாக கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சம் தொட்டு நகை பிரியர்கள், சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்தது.

இனி கனவில் தான் தங்கம் வாங்க முடியுமோ என நினைக்க வைத்த தங்கம் விலை அதன்பிறகு சற்று குறைய தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை குறைந்துகொண்டே சென்றது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

4 நாட்களாக அதிகரிப்பு

தொடர்ந்து விலை சரியும் என எதிர்பார்த்த நிலையில் 21 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. கடந்த 4 நாட்களாக ஏறுமுகத்திலேயே தங்கம் விலை இருந்து வந்தது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.1,19,440-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.14,930-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை

இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போல உயர்ந்து வந்த வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.295-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி தங்கம் விலை ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360 (இன்று)
25.02.2026 - ஒரு சவன் ரூ.1,19,440 (நேற்று)
24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120
23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880
22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320

11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880

27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680 (நேற்று)
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+